பொது செய்தி

இந்தியா

அறிவியல் சோதனை பயிற்சி முகாம்

Added : டிச 07, 2018
Advertisement
 அறிவியல் சோதனை பயிற்சி முகாம்

புதுச்சேரி:அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் சோதனை பயிற்சி நடந்தது.மத்தியஅரசு திட்டமான ராஷ்டிரிய அவிஷ்கார் சப்டாஹ், பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளையும், ஆய்வுகளையும் மாணவர்கள் கற்றுக் கொள்ளும் வகையில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நீர்நிலையிலிருந்து நீர் மாதிரியை எடுத்து நுரைத்தல் தன்மை, அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை ஆகியற்றை பரிசோதிக்கும் அறிவியல் சிறப்பு பயிற்சி நடந்தது.கல்வித்துறை அதிகாரி அகஸ்டின் முன்னிலையில், பள்ளி துணை முதல்வர் ரேணுகா தலைமையில் முகாம் நடந்தது. நிகழ்ச்சியில் பள்ளி விரிவுரையாளர்கள் சுப்பரமணியன், கணேசன், ரேவதி, ஜமுனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X