பொது செய்தி

இந்தியா

வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா

Added : டிச 07, 2018
Advertisement
 வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண்வள தின விழா

புதுச்சேரி:இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழகத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி குரும்பாபேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில், உலக மண்வள தின விழா நடந்தது.வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் வசந்தகுமார், மண்வள தினத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் பாலகாந்தி (எ) ராமகிருஷ்ணன் விவசாய பயனாளிகளுக்கு மண்வள அட்டைகளை வழங்கி, புதுச்சேரியில் மண் வளத்தை பாதுகாப்பதற்கு விவசாயிகளின் பங்கு மற்றும் அதிகாரிகள் பங்காற்ற வேண்டியதன் அவசியத்தை விளக்கி கூறினார்.தொடர்ந்து மண்வளம் பாதுகாப்பு முறைகள் குறித்து காரைக்கால் வேளாண் கல்லுாரியின் மண்ணியல் நிபுணர் பேராசிரியர் பகவதிஅம்மாள், உதவி பேராசிரியர் (உழவியல்) சரவணன், முனைவர் ஆனந்தன் ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர். விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.மண்வளம் பாதுகாப்பதற்கான உறுதிமொழியினை, நிலைய மீன்வள நிபுணர் திருமூலன் வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர். வேளாண் அறிவியல் நிலைய நோயியல் நிபுணர் சண்முகவேல் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மண்ணியல் நிபுணர் பிரபு செய்திருந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X