பொது செய்தி

இந்தியா

அசுர வேகத்தில் பறக்கும் வாகனங்கள்

Added : டிச 07, 2018
Advertisement

வெங்கட்டா நகரில் வேண்டும் வேகத்தடை

புதுச்சேரி:வெங்கட்டா நகர் சிறுவர் பூங்கா அருகே அசுர வேகத்தில் பறக்கும் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேகத்தடை அமைக்க வேண்டும்.புதுச்சேரி வெங்கட்டா நகரில், வனத்துறையின் சிறுவர் பூங்கா உள்ளது.இப்பூங்கா, சிறுவர்கள் விளையாடுவதற்கு மட்டும் இன்றி, இளைஞர்கள், பெரியவர்கள் காலை, மாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்ளவும் பெரிதும் உதவியாக உள்ளது. வெங்கட்டா நகர், ரெயின்போ நகர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பெரும்பாலானவர்கள் பூங்காவில் மாலை பொழுதை கழிக்கின்றனர்.சிறுவர் பூங்காவிற்கு செல்லும் 45 அடி சாலையில், பூங்கா நுழைவு வாயில் அருகே உள்ள வேகத்தடை உயரம் குறைந்து, சாலையுடன் சரிசமமாக உள்ளது. இதனால், வாகனங்கள் பூங்கா அருகே அதிவேகத்தில் பறக்கின்றன.இதனால், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மூத்த குடிமக்கள் எளிதாக சாலையை கடக்க முடிவதில்லை. குறிப்பாக மாலை நேரத்தில், பூங்கா செல்ல விரும்பும் மூத்த குடிமக்கள் சாலையை கடக்க படாதபாடு படுகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சாலையை கடக்க முயற்சித்த தாயும், மகளும் வாகனம் மோதி காயமடைந்தனர். சில மாதங்களுக்கு முன்பு, சாலையோரம் நின்றிருந்த பஸ் மீது மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக வந்த வாலிபர் மோதி உயிரிழந்தார்.இந்த சாலையில் தொடரும் உயிரிழப்பு மற்றும் சாலை விபத்துக்களை குறைக்க சிறுவர் பூங்கா நுழைவு வாயில் அருகே, இரு இடங்களில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X