புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரியில் அம்பேத்கர் நினைவு தினம் அனுஷ்டிப்பு

Added : டிச 07, 2018

புதுச்சேரி:அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது சிலைக்கு முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்,எல்,ஏ.,க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் கலந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.என்.ஆர்.காங்.,கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான ரங்கசாமி கலந்து கொண்டு, அம்பேத்கர் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பொதுச் செயலாளர் பாலன், முன்னாள் அமைச்சர்கள் ராஜவேலு, தியாகராஜன், பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,க்கள் செல்வம், சுகுமாறன், முன்னாள் எம்.எல்.ஏ., நேரு மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து, சட்டசபை எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.அ.தி.மு.க.,புதுச்சேரி அ.தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், நிர்வாகிகள் கணேசன், நாகமணி, அன்பானந்தம், ஞானவேல் ஆகியோர் மாலை அணிவித்தனர்.தி.மு.க.,தெற்கு மாநில தி.மு.க., அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில், தி.மு.க., அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக வந்து அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அவை தலைவர் சீத்தாவேதநாயகம், துணை அமைப்பாளர்கள் அனிபால் கென்னடி, குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வடக்கு மாவட்ட தி.மு.க.,வினர் அமைப்பாளர் எஸ்.பி., சிவக்குமார் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். துணை அமைப்பாளர் குமார், பொருளாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.இ.கம்யூ.,இந்திய கம்யூ., சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.முன்னாள் மாநில செயலாளர்கள் விஸ்வநாதன், நாரா.கலைநாதன், மாநிலக்குழு உறுப்பினர் சேதுசெல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர்.மா.கம்யூ.,மா. கம்யூ., சார்பில்பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.தமிழ்மாநில குழு உறுப்பினர் பெருமாள், செயற்குழு உறுப்பினர் நிலவழகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவர் ஜெயராமன், செயலாளர் ராமசாமி, நிர்வாகிகள் முனியாண்டி, நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.பா.ம.க.,பாமக சார்பில் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தலைமையில், நிர்வாகிகளும், அ.ம.மு.க., சார்பில் மாநில செயலாளர் வேல்முருகன் தலைமையில் நிர்வாகிகளும் மாலை அணிவித்தனர்.வி.சி., கட்சிவிடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், முதன்மை செயலாளர் தேவபொழிலன், பொதுச்செயலாளர் ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. அமைப்பு செயலாளர் அமுதவன், பொருளாளர் தமிழ்மாறன், தலைமை நிலைய செயலாளர் செல்வநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.ம.தி.மு.க.,ம.தி.மு.க. சார்பில் மாநில பொறுப்பளர் கபிரியேல் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.மாநில நிர்வாகிகள் பாவாடைசாமி, கலைவாணன், இளங்கோ, வேதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேக்கர் சிலைக்கும் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மாலை அணிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X