பொது செய்தி

இந்தியா

சாலையில் உறங்கும் பசுக்களால் விபத்து

Added : டிச 07, 2018
Advertisement

வில்லியனுார்:சேதராப்பட்டு சாலையில் ஆங்காங்கே படுத்துக்கொள்ளும் பசுமாடுகளால் தொடர் வாகன விபத்து ஏற்படுகிறது.சேதராப்பட்டு-மைலம் மற்றும் சேதராப்பட்டு-பத்துக்கண்ணு சாலையில், மாடுகள் சாலையிலேயே படுத்துக்கிடக்கின்றன. இரவு நேரங்களில் சாலையை ஆக்கிரமித்து படுத்துக் கொண்டிருப்பதால், வெளி மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்களில் பசுக்கள் சிக்கி விபத்துக்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மாடுகள் மீது மோதி விழுந்து விடுகின்றனர். தற்போது பனி பொழிந்து வருவதால், சாலையில் பசுக்கள் படுத்திருப்பதே தெரியாத நிலை ஏற்படுகிறது.இது குறித்து வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகத்திடம் கேட்டபோது, 'இது குறித்து புகார் வந்துள்ளது. பசுக்களின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட உள்ளது. இதன் பிறகும் சாலையில் பசுக்கள் இருந்தால், பறிமுதல் செய்யப்படும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X