மனைவி மறுப்பு: கணவர் தற்கொலை| Dinamalar

மனைவி மறுப்பு: கணவர் தற்கொலை

Added : டிச 07, 2018

புதுச்சேரி:பெரிய காலாப்பட்டு இ.சி.ஆரில் ஜாம்மீன் காம்ப்ளக்ஸ் பகுதியில் வசித்து வருபவர் இமான் முகமது, 50. இவரது மகன் அபிஅகமது, 23; கறிக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமாகிஒரு வயதில் குழந்தை உள்ளது. குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை இருந்து வந்ததால், அவரது மனைவி கோபித்து கொண்டு குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.குழந்தையின் நினைவாக இருந்த அபிஅகமது நேற்று மனைவிக்கு போன் செய்து வீட்டிற்கு வரும்படி கேட்டுள்ளார். அதற்கு மனைவி வர மறுத்ததால், மனமுடைந்த அபிஅகமது வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து காலாப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X