பொது செய்தி

இந்தியா

நான்கு மாநிலங்களில் காங்., ஆட்சியை பிடிக்கும்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை

புதுச்சேரி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலுங்கானா மாநிலங்களில் காங்., ஆட்சியை பிடிக்கும், முதல்வர் நாராயணசாமி பேசினார். புதுச்சேரி காங்., அலுவலகத்தில் அம்பேத்கரின் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:அம்பேக்தர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்க தயங்கியதில்லை. நாட்டில் சமதர்ம சமுதாயம் அமைய அடிக்கல் நாட்டியவர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு சுதந்திரம், உரிமை, இடஒதுக்கீடு கொடுத்தவர்.அவர் இல்லை என்றால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டிருக்க மாட்டார்கள். அம்பேத்கர் தனிப்பட்ட சமுதாயத்திற்கு சொந்தமானவர் என்று சிலர் நினைக்கின்றனர். அது தவறு, அவர் தனிப்பட்ட சமுதாயத்துக்கு சொந்தமாவர் அல்ல. யாரெல்லாம் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தினராக உள்ளனரோ அவர்களுக்கெல்லாம் அம்பேத்கர் சொந்தமானவர். அவரால்தான் இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டது.இந்திரா, ராஜிவ் உள்ளிட்ட காங்., பிரதமர்கள் அம்பேத்கர் வழியில் ஆட்சி நடத்தினர். மேல்படிப்பிலும், பதவி உயர்விலும் இடஒதுக்கீடு கொடுத்தது காங்கிரஸ்தான். அதை கொண்டுவரவிடாமல் தடுத்தது பா.ஜ., நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.டில்லியிலும், புதுச்சேரியிலும் ஒரு சக்தியை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. 4 மாதத்தில் இந்திய அளவில் மாற்றம் வரும். தற்போது 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும். சரித்திரம் மாறும். ஆட்சியில் இருப்பவர்கள் காணாமல் போவர்.மத்திய பா.ஜ., அரசு வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சி.பி.ஐ., அமைப்புகளை வைத்து எதிர்க்கட்சிகளை மிரட்டி வருகிறது. ஒருவரின் டைரியில் பெயர் இருப்பதால் குற்றவாளி ஆகிவிட முடியாது. அப்படி என்றால் பிரதமர் மேல் கூட ஒரு வழக்கு உள்ளது. இக்கட்டான காலக்கட்டத்தில் ஆட்சியை நடத்தி வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார். காங்., துணை தலைவர்கள் முன்னாள் முதல்வர் ராமச்சந்திரன், தேவதாஸ், நீல கங்காதரன், பொதுச்செயலாளர் ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan - Bangalore,இந்தியா
07-டிச-201816:31:35 IST Report Abuse
Raghunathan மிசோரம் மாநிலத்தில் மட்டும் அவங்க ஆட்சி நடக்குது ஆனா அதை கோட்டை விட்டுவிட்டு பா ஜ க ஆளும் நான்கு மாநிலத்தை பிடிப்போம் என்று சொல்லுவது காமெடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X