பொது செய்தி

தமிழ்நாடு

வகுப்பறைக்கு வெளியே! இடைநிற்றலை தவிர்க்க 'இம்பார்ட்' திட்டம்:தமிழ் பாடத்துக்காக நூலகத்துக்கு 'விசிட்'

Added : டிச 07, 2018
Advertisement
 வகுப்பறைக்கு வெளியே! இடைநிற்றலை தவிர்க்க 'இம்பார்ட்' திட்டம்:தமிழ் பாடத்துக்காக நூலகத்துக்கு 'விசிட்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மரப்பேட்டை நுாலகத்துக்கு, 'இம்பார்ட்' திட்டத்தின் கீழ் அழைத்து வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள், நுாலகத்தின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர்.அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இடைநிற்றலை தடுக்கவும், பின்தங்கிய மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தவும், பங்கேற்றலின் முக்கியத்தும் (இம்பார்ட்) திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், பாட வாரியாக ஐந்து பேர் கொண்ட மாணவர்கள் குழு ஏற்படுத்தப்படுகிறது. அதில், நன்கு படிக்கும் ஒரு மாணவன், நடுத்தரமாக படிக்கும் ஒரு மாணவன் மற்றும் பாடத்தில் பின்தங்கியுள்ள மூன்று மாணவர்கள் இருப்பர்.இந்தக்குழுவுக்கு வகுப்பறைக்கு வெளியே சென்று கற்றுக்கொள்ளும்படி பயனுள்ள தலைப்பு ஒன்று வழங்கப்படும். ஆசிரியர்கள் துணையுடன் தலைப்பு சம்மந்தமான இடங்களுக்கு மாணவர் குழு நேரில் சென்று, அங்குள்ள நடவடிக்கைகளை அறிந்து கொள்ளும்.மாணவர்கள் பாடம் மற்றும் பாடம் சாராத பொது அறிவு விஷயங்களில் தங்கள் பங்கேற்பை அதிகரிக்க, ஆர்வத்தை துாண்டும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.அந்தக்குழு தாங்கள் கற்றுக்கொண்டதை கொண்டு, 'பிராஜக்ட்' செய்ய வேண்டும். கல்வி மாவட்ட அளவில் ஐந்து சிறந்த 'பிராஜக்ட்'கள் தேர்வு செய்யப்படும். கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் அளவில் தேர்வு செய்யப்படும் குழு, மாநில அளவில் போட்டியிடும். மாநில அளவில் தேர்வு செய்யப்படும் ஐந்து 'ப்ராஜக்ட்'களுக்கு பரிசு வழங்கி ஊக்குவிக்கப்படும். இத்திட்டத்தின் கீழ், பொள்ளாச்சி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் ஒன்பதாவது வகுப்பு மாணவர் குழு, தமிழ் பாடத்தில் நுாலகத்தை தலைப்பாக தேர்வு செய்துள்ளது.
அக்குழு, தமிழ் ஆசிரியர் ஜெயலட்சுமியின் துணையுடன், மரப்பேட்டை முதல் நிலை நுாலகத்துக்கு நேற்று, 'விசிட்' செய்தது.குழு மாணவர்கள் நுாலகத்தை பார்வையிட்டும், முதல் நிலை நுாலகர் ரவியின் துணையுடனும் நுாலகத்தின் நடவடிக்கைகளை அறிந்து கொண்டனர்.ஆசிரியர்கள் கூறுகையில், ''வகுப்பைறையை தாண்டிய இவ்வகை பயிற்சிகள் மாணவர்களின் ஆர்வத்தை துாண்டுகிறது. வழக்கமான கற்றலை விட, அவர்களே கேள்வி கேட்டு தெரிந்து கொள்ளும் போது, மனதில் நன்கு பதியும். குழுவாக செயல்படுதல், கேள்வி கேட்டல், கவனித்தல், உள்வாங்குதல் திறன்கள் மேம்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X