பொது செய்தி

இந்தியா

அம்பேத்கர் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு விமோசனம்

Added : டிச 07, 2018
Advertisement
 அம்பேத்கர் சாலை போக்குவரத்து நெரிசலுக்கு விமோசனம்

எஸ்.பி., வம்சீதர ரெட்டி அதிரடி

புதுச்சேரி:கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் உப்பளம் அம்பேத்கர் சாலைக்கு விடிவுகாலம் பிறக்க, போக்குவரத்து போலீசார்முயற்சித்து வருகின்றனர்.புதுச்சேரி உப்பளம் அம்பேத்கர் சாலையில் பெத்தி செமினார், இமாகுலேட் பள்ளிகள் உள்ளது. இச்சாலை வழியாக, தேங்காய்த்திட்டு ஆச்சார்யா பள்ளிக்கும் செல்ல வேண்டும். இந்த சாலையில் காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரையிலும், மாலையில் 3:00 மணி முதல் 4:30 மணிவரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர்களின் வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சாலையில் தாறுமாறாக நிறுத்தி வைப்பது, சோனாம்பாளையம் ரயில்வே கேட்டை அடிக்கடி மூடி திறப்பது, சாலையோரத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் பின்புறம் 2வது வரிசை அமைத்து ஆட்டோ, மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி விட்டு செல்வதால் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.பள்ளியில் இருந்து குழந்தைகளை ஏற்றி செல்லும் ஆட்டோக்கள், இடதுபுறத்தில் இருந்து வலது புறத்திற்கும், வலது புறத்தில் நிறுத்தி வைக்கும் ஆட்டோக்கள் இடது புறத்திற்கும் சாலையை கடக்கும்போது, கடுமையான டிராபிக் ஜாம் ஏற்படுகிறது.இந்த போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு காண, போக்குவரத்து போலீஸ் முடிவு செய்துள்ளனர்.போக்குவரத்து போலீஸ் எஸ்.பி., வம்சீதரரெட்டி நேற்று பெத்தி செமினார் பள்ளி அருகே ஆய்வு நடத்தினார். ஆய்வின்போது, பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ் உடனிருந்தார்.அப்போது, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை சாலையில் நிறுத்தி குழந்தைகளை இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், ஆட்டோ மற்றும் பெற்றோர்களின் மோட்டார் சைக்கிள்களை பள்ளியின் 2வது கேட் வழியாக உள்ளே அனுமதித்து குழந்தைகளை இறக்கிவிட்டு, வெளியேற தனி வழி உருவாக்குதல், பள்ளியின் வாயில் பகுதியில் மட்டும் உயரமாக அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலை சீரமைத்து, சாலையின் உயரத்திற்கு வாய்க்கால் அமைப்பதும், பள்ளி வளாகம் எதிரில் காலியாக உள்ள 5 அடி அகல மண் பாதையை தார்சாலையாக விரிவாக்கம் செய்து, அப்பகுதியில் இரு சக்கர வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்தல் என முடிவு செய்யப்பட்டது. இப்பணிகள் மேற்கொண்டால், உப்பளம் சாலையில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசல் சற்று குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X