புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு பயிற்சி முகாம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு பயிற்சி முகாம்

Added : டிச 07, 2018
 புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மேம்பாட்டு பயிற்சி முகாம்

புதுச்சேரி:புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், உயிர் வேதியியல் மூலக்கூறு உயிரியல் துறை சார்பில், பள்ளி மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடந்தது.'மருந்து கண்டுபிடிப்புகளில் அறிவியல் விளக்கங்கள்' என்ற தலைப்பில் நடந்த பயிற்சி முகாமில், பல பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாத்திரைகள் கண்டு பிடிப்புகளில் அறிவியல் முறைகள், மனிதர்கள் பயன்படுத்துவதற்கு முன்பான பரிசோதனை முறைகள், செல் ஆராய்ச்சி, மருந்து தயாரிப்புகளில் ஆராய்ச்சி நிறுவனங்களின் பங்களிப்பு போன்ற பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு பயிற்சி நடத்தப்பட்டது.முன்னதாக, பயிற்சி முகாமை, பேராசிரியர்கள் ஜீவரத்தினம், பிரதாப் குமார் ஷெட்டி ஆகியோர் துவக்கி வைத்தனர். பேராசிரியர்கள் மகேஷ்வரன் மணி, மது தேவய்யா, ருக்குமணி உள்ளிட்டோர், மருந்து கண்டுபிடிப்பில் செல் ஆராய்ச்சி முறைகள் குறித்து பேசினர்.பேராசிரியர்கள் சுதாராணி, கிட்லலங்கி சச்சி யாங், திருநாவுக்கரசு, மோகன் குமார் ஆகியோர், ஆய்வுக் கூடங்கள் மூலம் அணுக்களை பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து மாணவர்கள் மத்தியில் விளக்கம் அளித்தனர்.நிகழ்ச்சியில், அறிவியல் தொடர்பாக நடத்தப்பட்ட வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற தி ஸ்டடி பள்ளி , கேந்திரியா வித்யாலயா (ஜிம்பர் வளாகம்) போன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். பேராசிரியர்கள் பார்த்தசாரதி, தினகர ராவ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். இந்திய உயிர் தொழில்நுட்பவியல் சங்கத்தின் நிதியுதவியோடு, இந்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X