பொது செய்தி

இந்தியா

சபரி செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

Added : டிச 07, 2018
Advertisement
 சபரி செவிலியர் கல்லுாரியில் மாணவர்களுக்கு பட்டமளிப்பு

புதுச்சேரி:கிருமாம்பாக்கம் சபரி செவிலியர் கல்லுாரியில், நான்காம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.கல்லுாரி தாளாளர் கோபிநாராயணன், விழாவை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் ழெனஸ்தா மேரிழிழேல் வரவேற்றார். துணை முதல்வர் உமா ஆண்டறிக்கை வாசித்தார்.புதுச்சேரி நலத்துறை துணை இயக்குனர் அல்லிராணி சிறப்புரையாற்றி, மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கி பாராட்டினார்.விழாவில், 2018ம் ஆண்டில் பட்டயப்படிப்பை முடித்தவர்களில் இரண்டாம் இடம் பெற்ற மாணவர் பார்த்திபனுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாணவ மாணவிகளுக்கு செவிலியர் பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.கல்லுாரி முதல்வர் உறுதிமொழி வாசிக்க, மாணவர்கள் உறுதி ஏற்றுக் கொண்டனர். கல்லுாரி விரிவுரையாளர் திவ்யசந்திரிகா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X