பொது செய்தி

இந்தியா

மேகதாது விவகாரம் குறித்து விவாதிக்க சிறப்பு கூட்டம்

Added : டிச 07, 2018
Advertisement

புதுச்சேரி:மேகதாது அணை பிரச்னை குறித்து விவாதிப்பதற்காக, புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டம், வரும் வாரத்தில் கூட்டப்பட உள்ளது.கர்நாடக மாநிலம், மேகதாது என்ற இடத்தில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அணை கட்டுவது தொடர்பாக ஆரம்பகட்ட ஆய்வு நடத்துவதற்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது.மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், காவிரியில் இருந்து தண்ணீர் வருவது தடைபடும் என, தமிழகம், புதுச்சேரியில் எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளன.தமிழகத்தை போல, புதுச்சேரியிலும், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட வேண்டும் என, தி.மு.க., - அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர். மேலும், சபாநாயகரை முற்றுகையிட்டு, போராட்டமும் நடத்தினர்.புதுச்சேரி சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவது தொடர்பாக, சபாநாயகர் வைத்திலிங்கம் நேற்று ஆலோசனை நடத்தினார். சட்டசபை செயலர் வின்சன்ட் ராயரை அழைத்து பேசினார். முதல்வர் நாராயணசாமியை தொடர்பு கொண்டு விவாதித்தார்.இந்நிலையில், புதுச்சேரியிலும், சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் 14ம் தேதி, காலை 10:00 மணியளவில் சிறப்பு கூட்டம் நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது.மேகதாது அணை தொடர்பாக அளித்த அனுமதியை திரும்பப் பெற, மத்திய அரசை வலியுறுத்தி, தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X