பொது செய்தி

இந்தியா

வெளிநாட்டு தொழில் அதிபர்களுடன் முதல்வர் உரையாடல்

Added : டிச 07, 2018
Advertisement
 வெளிநாட்டு தொழில் அதிபர்களுடன் முதல்வர் உரையாடல்

புதுச்சேரி:புதுச்சேரியில் தொழில் தொடங்க முன்வருமாறு, வெளிநாட்டு தொழிலதிபர்களுடன் முதல்வர் நாராயணசாமி, வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாடினார்.புதுச்சேரி மாநிலத்தில், தொழிற்சாலைகளுக்கு கிடைத்து வந்த சலுகைகள், குடிநீர் மற்றும் மின் கட்டண மானியங்கள் உள்ளிட்டவை காலப்போக்கில் குறைந்தது. மற்றும் ரவுடிகள் தொல்லை என, பல்வேறு காரணங்களால், புதுச்சேரியை விட்டு பெரும்பாலான தொழிற்சாலைகள் இடம் பெயர்ந்தன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டது. இதனால், புதுச்சேரிக்கு தொழிற்சாலைகள் மூலம் கிடைத்து வந்த வரி வருவாய் முற்றிலும் குறைந்தது. வேலை வாய்ப்பு பிரச்னை தலைதுாக்கியது.எனவே, புதுச்சேரியில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, காங்., அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், புதிய தொழிற்கொள்கை அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், தொழில்முனைவோருக்கு மூலதன முதலீட்டு மானியம், வட்டி மானியம், முத்திரை வரி விலக்கு, மின் கட்டண மானியம், தொழில் தொடங்க விண்ணப்பிக்க சிங்கில் விண்டோ சிஸ்டம் என, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டது.மேலும், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநில தொழில் முனைவோர்களை, புதுச்சேரியில் தொழில் துவங்க அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று மாலை, சட்டசபை கேபினட் அறையில் இருந்து, வெளிநாட்டு தொழிலதிபர்களுடன் முதல்வர் நாராயணசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.அமெரிக்கா நாட்டின் தலைநகரம் வாஷிங்டன், பெனிசுலோவியாவில் உள்ள தொழிலதிபர்களுடன் முதல்வர் உரையாடினார். அப்போது, டில்லியில் உள்ள தொழில் அதிபர்களுடன் ஒருங்கிணைந்து, புதுச்சேரி மாநிலத்தில் தொழில் தொடங்க வருமாறும். புதுச்சேரியில் தொழில் தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் எடுத்துரைத்தார். வருவாய் துறை அமைச்சர் ஷாஜகான், வளர்ச்சி ஆணையர் அன்பரசு, தொழில்துறை செயலர் சரண், அரசு செயலர்கள் பார்த்தீபன், பத்மா ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக இந்த உரையாடல் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X