அரசு செயலர்களுடன் ஆலோசனை | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அரசு செயலர்களுடன் ஆலோசனை

Added : டிச 07, 2018

புதுச்சேரி:அரசு செயலர்களுடன், முதல்வர் நாராயணசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.பட்ஜெட்டில் துறை வாரியாக ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக, அரசு செயலர்கள், துறை தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் பங்கேற்ற கூட்டம், முதல்வர் நாராயணசாமி தலைமையில், கடந்த 3ம் தேதி, தலைமைச் செயலகத்தில் நடந்தது.இதன் தொடர்ச்சியாக, தலைமைச் செயலர் மற்றும் அரசு செயலர்கள் பங்கேற்க கூட்டம், சட்டசபை வளாகத்தில் உள்ள கேபினட் அறையில் நேற்று நடந்தது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, கமலக்கண்ணன் கலந்து கொண்டனர்.துறைவாரியான செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. திட்டங்களை விரைவுப்படுத்துமாறும், பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகையை செலவிடுவதில் வேகம் காட்டுமாறும் முதல்வர் அறிவுறுத்தினார்.அதிகாரிகளுக்கு அர்ச்சனை முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தை, போட்டோ, வீடியோ எடுப்பதற்காக, பத்திரிகையாளர்கள் சென்றனர். கூட்டத்தில், காரசாரமாக விவாதம் நடந்ததால், போட்டோகிராபர்களுக்கும், வீடியோகிராபர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.இதுகுறித்து விசாரித்தபோது, அதிகாரிகள் சிலரை, முதல்வர் கடுமையாக சாடியதால் கதவு மூடப்பட்டதும், போட்டோகிராபர்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதும் தெரிய வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X