பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பு அகற்றியதால் ரோடு பளீச்: நகராட்சி அதிகாரிகள் ஆய்வு

Added : டிச 07, 2018
Share
Advertisement

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மார்க்கெட் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், ஆக்கிரமிப்பு அகற்றப்படாத இடங்களில், 'பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றினர்.பொள்ளாச்சி நகராட்சி காந்தி மார்க்கெட் செல்லும் ரோட்டின் இருபக்கமும், மீன் கடைகள், இறைச்சி கடைகள் என, 70க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.நாளுக்கு நாள் கடைகள் முன் பகுதியில் உள்ள சாக்கடை மீதும் கடைகள் அமைக்கப்பட்டது.
இதனால், ரோடு குறுகலானது.கடந்த, 3ம் தேதி நகராட்சி அதிகாரிகள் முன்னிலையில், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்பு அகற்றிய இடத்தில், நகராட்சி கமிஷனர் கண்ணன் தலைமையில், நகரமைப்பு அலுவலர் கோபால், நகரமைப்பு ஆய்வர்கள் வெங்கடேஷ், உதயகுமார், சந்தை கண்காணிப்பாளர் (பொ) பெலிக்ஸ், இளநிலை பொறியாளர் திலிபன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பு அகற்றப்படாத இடங்களில், 'பொக்லைன்' இயந்திரம் கொண்டு, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'காந்தி மார்க்கெட் பகுதியில், சாக்கடை மீதும், ரோட்டிலும் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது. ஆக்கிரமிப்பு முழுவதும் அகற்றப்பட்டதும், ரோடு எல்லையில் சாக்கடை சீரமைக்கப்பட்டு, புதிதாக ரோடு அமைக்கப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X