இந்தியா

குறைந்தது! புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு...சுகாதாரத் துறையினர் நிம்மதி

Added : டிச 07, 2018
Advertisement
 குறைந்தது! புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு...சுகாதாரத் துறையினர் நிம்மதி

-- நமது நிருபர் -சுகாதாரத் துறையினரின் தீவிர முயற்சியாலும், பொதுப்பணி மற்றும் உள்ளாட்சி துறையினரின் ஒத்துழைப்பாலும், புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு பெரிதும் குறைந்துள்ளது.புதுச்சேரியில், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின்போது, கொசுக்கள் மூலமாக பரவும் டெங்கு, சிக்குன் குன்யா, மலேரியா போன்ற காய்ச்சல்கள் அதிகமாக பரவுவது வழக்கம். அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற சூழல் நிலவுகின்ற, ஜூலையில் ஆரம்பித்து, டிசம்பர் வரை, காய்ச்சல்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும்.புதுச்சேரியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, டெங்கு காய்ச்சல் பாதிப்பு, கடந்த ஆண்டு உச்சக்கட்டத்தை எட்டியது. அதாவது, 4,568 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டது. உஷார் அடைந்த சுகாதாரத் துறையினர், மழைக்காலத்தின் துவக்கமான ஜூன் மாதத்தில் இருந்தே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டனர்.பொதுப்பணித் துறை அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. கோரிமேட்டில் அமைந்துள்ள, கொசுக்களால் பரவும் நோய் கட்டுப்பாடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் உதவிக் கரம் நீட்டியது.இதன் எதிரொலியாக, நடப்பு ஆண்டில், புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இந்தாண்டு இதுவரை 491 பேர் மட்டுமே டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, 90 சதவீதம் அளவுக்கு பாதிப்பு குறைந்துள்ளது. இதனால், சுகாதாரத் துறையினர் நிம்மதி அடைந்துள்ளனர்.டெங்கு பாதிப்பு குறைந்ததற்கான காரணங்கள் குறித்து, சுகாதாரத் துறையின் இணை இயக்குனரும், கொசுக்கள் மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்கள் தடுப்புக்கான தேசிய திட்டத்தின் மேலாளருமான டாக்டர் சுந்தர்ராஜ் கூறும்போது, 'கடந்தாண்டு ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறை சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை, மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே துவக்கி விட்டோம். இதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.மேலும், கழிவுநீர் வாய்க்கால்களை பொதுப்பணித் துறையினர் ஒட்டுமொத்தமாக துார்வாரி சுத்தம் செய்துள்ளதால், கழிவு நீர் தேங்கவில்லை. தெருக்களில் குவிந்துள்ள குப்பைகளை, உள்ளாட்சித் துறையினரும் உடனுக்குடன் அகற்றி வருகின்றனர். இதனால், கொசுக்கள் உற்பத்திக்கான வாய்ப்புகள் பெரிதும் குறைந்துள்ளது.திட்டமிட்ட, ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் காரணமாக, நடப்பு ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X