பொது செய்தி

இந்தியா

காலாப்பட்டு மத்திய சிறை கைதிகள் இரண்டாம் நாளாக உண்ணாவிரதம்

Added : டிச 07, 2018
Advertisement

புதுச்சேரி:காலாப்பட்டு மத்திய சிறையில், தண்டனை கைதிகளுக்கு கடந்த 4 மாதங்களாக பரோல் விடுமுறை அளிக்காததைக் கண்டித்து, சிறை கைதிகள் நேற்று இரண்டாவது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.காலாப்பட்டு மத்திய சிறையில், 54 தண்டனை கைதிகளும், 150க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் உள்ளனர். தண்டனை கைதிகளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு பரோலில் செல்ல விதி உள்ளது.இதன்படி, ஆயுள் தண்டனை, கடுங்காவல் தண்டனை பெற்ற 20க்கும் மேற்பட்ட கைதிகள், பரோல் வழங்க கோரி, கடந்த 4 மாதத்திற்கு முன்பு சிறை நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.சிறை தலைமை கண்காணிப்பாளரிடம் அளிக்கப்பட்ட மனுக்கள், சிறை ஐ.ஜி. பங்கஜ்குமார் ஜாவிடம் வழங்கப்பட்டது. பரோல் விடுமுறை கேட்கும் கைதிகளுக்கு, உள்ளூர் போலீசாரும், விடுமுறை அளிக்கலாம் என தெரிவித்தனர். ஆனால், சிறை நிர்வாகம் தண்டனை கைதிகளுக்கு பரோல்விடுமுறை அளிக்காமல் மனுக்களை கிடப்பில் போட்டு வைத்துள்ளது.இதை கண்டித்து சிறையில் உள்ள தண்டனை கைதிகள் 15 பேர்,நேற்று முன்தினம் இரவு, உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். நேற்று இரண்டாவது நாளாக கைதிகளின் போராட்டம் தொடர்ந்தது. இதில், அனைத்து தண்டனை கைதிகளும், (50 பேர்) பங்கேற்றனர். தண்டனை கைதிகள் தொடர்ந்து சாப்பிடாமல் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர். விசாரணை கைதிகள் வழக்கம்போல் சாப்பிட்டனர். உண்ணாவிரத போராட்டத்தால், சிறை வளாகம் பரபரப்பாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X