சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணைவேந்தர் லஞ்ச வழக்கு தாமதம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

கோவை:கோவை பாரதியார் பல்கலை துணைவேந்தர் கணபதி, உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் பெற்ற வழக்கில், 10 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், குற்றப்பத்திரிகை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை.

கோவை பாரதியார் பல் கலை துணைவேந்தராக இருந்த கணபதி, உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கு லஞ்சம் வாங்கியபோது, கடந்த பிப்., 3ம் தேதி, லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாகவும், 29 லட்சத்தை, காசோலையாகவும் லஞ்சமாக பெற்றது தெரியவந்தது.இதன் தொடர்ச்சியாக, துணைவேந்தர் கணபதி, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.

லஞ்சம் வாங்க துணையாக இருந்த, பல்கலை வேதியியல் துறை தலைவர், தர்மராஜும் கைது செய்யப்பட்டார். பல்கலை தொலைதுார கல்வி மைய இயக்குனர், மதிவாணன் மீதும், லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சிறையில் இருந்த துணைவேந்தர் கணபதியை, லஞ்ச ஒழிப்பு போலீசார், ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். பின், துணைவேந்தர் மற்றும் தர்மராஜ் ஜாமினில் வெளியே வந்தனர்.

தற்போது இந்த வழக்கிற்கு தேவையான ஆவணங்கள், குற்றப்பத்திரிகை தயாரிக்கும் பணிகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.துணைவேந்தர் கணபதி மீது லஞ்ச வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது.கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கு தொடர்பாக, சில ஆடியோ ஆதாரங்கள் திரட்டப் பட்டு உள்ளன. இந்த ஆடியோவில் பதிவாகியுள்ள குரல் மாதிரி, துணைவேந்தர் குரலுடன் ஒப்பிடும் பணிக்காக, சென்னை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. கவர்னர் அலுவலகத்தில் இருந்து சில ஆவணங்கள் பெற காலம் தேவைப்படுகிறது. இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதால், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தாமதமாகி உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:27:13 IST Report Abuse
Bhaskaran பணம் பத்தும் செய்யும் பத்து மாதங்களெல்லாம் அதற்கு ஒருபொருட்டா பத்துவருடம் ஆகட்டும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X