பொது செய்தி

இந்தியா

அம்பேத்கர் சிலை அமைக்கும் பணி

Added : டிச 07, 2018
Advertisement

அமைச்சர், மாஜி அமைச்சர் துவக்கி வைப்பு

பாகூர்:கிருமாம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை மற்றும் நுழைவு வாயில்,அமைக்கும் பணியை, அமைச்சர் கந்தசாமியும், என்.ஆர். காங்., முன்னாள் அமைச்சர் ராஜவேலுவும்இணைந்து துவக்கி வைத்தனர்.புதுச்சேரி அரசு பாட்கோ சார்பில் ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கிருமாம்பாக்கத்தில், முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் உத்திரவேலு சமாதி அருகே, 1 கோடியே 40 லட்ச ரூபாய் செலவில், நுழைவு வாயில், அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான, அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. அமைச்சர் கந்தசாமியும், முன்னாள் அமைச்சர் ராஜவேலுவும் இணைந்து, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தனர். ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன், பாட்கோ செயற்பொறியாளர் ஏகாம்பரம், உதவி பொறியாளர் சாம்பசிவம், இளநிலை பொறியாளர் ஜெயமுகுந்தன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவி முனியம்மாள், கிருமாம்பாக்கம் அரசு ஊழியர் சங்க தலைவர் அரிதாஸ், செயலாளர் செல்வம், பொருளாளர் ஆனந்தவேலு, என்ஆர்.காங்., பிரமுகர் லட்சுமிகாந்தன், ஆறுமுகம், அன்பழகன், ராமலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஏம்பலம் தொகுதியில் இரு துருவங்களாக இருந்து வரும் அமைச்சர் கந்தசாமியும், என்.ஆர்.காங்., முன்னாள் அமைச்சர் ராஜவேலுவும், கிருமாம்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற அம்பேத்கர் சிலை அமைக்கும் பணியை, இணைந்து துவக்கி வைத்தது, இருதரப்பினரின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X