பொது செய்தி

இந்தியா

கண்ணீர் விட்டு கதறிய அமைச்சர் அரசு விழாவில் பரபரப்பு

Added : டிச 07, 2018
Advertisement

கிருமாம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலை மற்றும் நுழைவு வாயில் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவில், அமைச்சர் கந்தசாமி பேசியதாவது;உத்திரவேலு எதிர்க்கட்சி தலைவராக சிறப்பாக செயல்பட்டு மக்கள் நலப்பணிகளை செய்தவர். அவர் கிருமாம்பாக்கத்தை சேர்ந்தவர் என பெருமை கொள்ள வேண்டும். இங்கு, அம்பேத்கர் நுழைவுவாயில் அமைக்கப்பட உள்ளது. இதே இடத்தில் மறைந்த எதிர்க்கட்சி தலைவர் உத்திரவேலுக்கும் சிலை வைக்க உள்ளோம். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது. அவரிடம் சிறு வயதிலிருந்து பழகியுள்ளேன். அவரிடம் பழகிய நாட்களை என்னால் மறக்க முடியாது. (இவ்வாறு பேசிய அமைச்சர் கந்தசாமி கண்ணீர் விட்டு அழுதார்)மூன்று முறை என்னை கொலை செய்ய திட்டமிட்டனர். மோதல் சம்பவம் ஏற்படக் கூடாது என்று கருதி அதை நான் யாரிடமும் சொல்லவில்லை.ஒரே ஊரை சேர்ந்த 2 பேர் அரசியலில் இருப்பதால் பல மோதல் சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் தான், கிருமாம்பாக்கத்தில் இருந்து வம்பாப்பேட் பகுதியில் வீடு கட்டி அங்கு குடியேறினேன். நமக்குள் இருக்கும் மோதல்களை கைவிட வேண்டும். மோதல் தொடர்ந்தால் தொகுதி மக்களின் வாழ்க்கைத் தரம் கேள்விக் குறியாகிவிடும். மன கசப்புகளை மறந்து தொகுதி வளர்ச்சிக்காகவும், மக்களின் நலனுக்காகவும் செயல்பட வேண்டும். இவ்வாறு பேசிய அமைச்சர் மீண்டும் கண்ணீர் விட்டு கதறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X