பொது செய்தி

இந்தியா

அடிப்படை வசதி கேட்டு போராட்டம்

Added : டிச 07, 2018
Advertisement
 அடிப்படை வசதி கேட்டு போராட்டம்

வில்லியனுார்:ஊசுடு தொகுதி ராமநாதபுரம் கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வலியுறுத்தி பா.ம.க., சார்பில் வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. ராமநாதபுரம் கிராமத்திற்கு சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வலியுறுத்தி வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் பா.ம.க., இளைஞர் அணி ரமேஷ் தலைமையில், வில்லியனுார் தொகுதி தலைவர் விஜயகுமார் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர்.ராமநாதபுரம் கிராமத்திற்கு உடனடியாக கொசுமருந்து அடிப்பதாகவும், சாலையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும், தெரிவித்தனர்.கிராம சாலை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், அதிகாரிகளிடம் எடுத்துகூறி சாலையை சரி செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டது. அதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்துசென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X