பொது செய்தி

இந்தியா

தோழியுடன் மாயமான மாணவி சென்னையில் மீட்ட போலீசார்

Added : டிச 07, 2018
Advertisement

புதுச்சேரிபெற்றோர் திட்டியதால் தோழியுடன் வீட்டை விட்டு வெளியேறிய மாணவியை போலீசார் சென்னையில் மீட்டனர்.புதுச்சேரியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் பிரத்தியங்கிரா தேவி, 15; 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அடிக்கடி மொபைல் போன் பார்த்ததை தந்தை கண்டித்தார்.இதனிடையே பிரத்தியங்கிராதேவி வீட்டில் இருந்து மாயமானார். அதேநாளில் அவரது தோழியான டயானா காசிமாலையும் காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்த பெற்றோர்கள் நேற்றுமுன்தினம் மேட்டுப் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.இந்நிலையில் பிரத்தியங்கிரா தேவியும், டயானா காசிமாலையும் சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து பெற்றோருடன் அங்கு சென்ற போலீசார், இருவரையும் புதுச்சேரி அழைத்து வந்தனர்.பிரத்தியங்கிரா தேவி போலீசாரிடம் கூறியதாவது:மொபைல் போன் பார்த்ததை பெற்றோர் கண்டித்ததை எனது தோழியிடம் கூறினேன். தோழியான காசிமாலை அவரது உறவினர் வீடு சென்னையில் இருப்பதாகவும், அங்கு போய் வேலை செய்து பிழைத்து கொள்ளலாம் என கூறினார். இதை அடுத்து பெற்றோர் செலவுக்கு கொடுத்திருந்த பணத்தை எடுத்து கொண்டு சென்னை சென்றோம். அங்கு உறவினரின் முகவரியை கண்டுபிடிக்க முடியாததால் வேறு வழியின்றி வீடு திரும்ப முடிவெடுத்தோம். சென்னையில் இருந்த ஒருவரிடம் மொபைல் போனை வாங்கி பெற்றோருக்கு தகவல் தெரிவித்தோம். அதன்பிறகு போலீசார் எங்களை மீட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து 2 பேருக்கும் அறிவுரை கூறிய போலீசார், அவர்களை மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி, பெற்றோருடன் ஒப்படைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X