பொது செய்தி

இந்தியா

கோட்டை மேட்டில்  சிக்னல் மீண்டும் இயங்கியது

Added : டிச 07, 2018
Advertisement

வில்லியனுார்:கோட்டைமேடு நான்கு ரோடு சந்திப்பில், போக்குவரத்து சிக்னல், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது.வில்லியனுார் கோட்டைமேடு நான்கு ரோடு சந்திப்பில், காலை மற்றும் மாலை நேரங்களில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கம். இதனால் வில்லியனுார் அண்ணா சிலை சதுக்கம் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன விபத்துகள் நடந்து வந்தது. பொதுமக்களின் நலன் கருதி, வில்லியனுார் அண்ணா சிலை மற்றும் கோட்டைமேடு நான்கு ரோடு சந்திப்பு ஆகிய பகுதியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு போக்குவரத்து சிக்னல் அமைக்கப்பட்டது.சில காலம் செயல்பட்டு வந்த போக்குவரத்து சிக்னல், படிப்படியாக நிறுத்தப்பட்டது. பல லட்சம் செலவு செய்து அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் பழுதடைந்தது.தற்போது போக்குவரத்து எஸ்.பி.,யாக பொறுப்பேற்றுள்ள ரட்சனாசிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு வில்லியனுார் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீஸ் ஸ்டேஷன் எல்லை குறித்தும் போக்குவரத்து சிக்னல் குறித்தும் கேட்டறிந்து பைபாஸ் சாலையில் உள்ள சிக்னலை ஆய்வு செய்தார்.இந்நிலையில் நேற்று முதல் கோட்டைமேடு நான்கு ரோடு சந்திப்பில் உள்ள போக்குவரத்து சிக்னல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. இதனை பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வரவேற்றுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X