மனைவிக்கு, 'செக்ஸ்' டார்ச்சர் கணவன் மீது பலாத்கார வழக்கு

Added : டிச 07, 2018
Advertisement

புதுடில்லி:கர்ப்பமாக இருக்கும் மனைவியின் விருப்பத்துக்கு மாறாக, உறவு கொள்ள முயற்சித்த கணவன் மீது, பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கு வங்க மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பன்ஸ்பரியா என்ற இடத்தைச் சேர்ந்த பெண், நீதிமன்றத்தில், சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார்; அதன் விபரம்:எனக்கு, சமீபத்தில் திருமணம் ஆனது. மாப்பிள்ளை, தனியார் வங்கியில் உயர் பதவியில் இருப்பதாகக் கூறி, திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால், அவர், சிறிய நிறுவனத்தில், கடைநிலை ஊழியராக பணியாற்றி வந்தது, திருமணத்துக்கு பின் தெரிய வந்தது. அந்த வேலையில் இருந்தும், அவர் விலகிவிட்டார். என் விருப்பத்துக்கு மாறாக, பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்துகிறார். வரதட்சணை கேட்டு, என் மாமனார், மாமியாரும் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்.

இந்நிலையில், நான் சமீபத்தில் கர்ப்பம் அடைந்தேன். அப்போது கூட, என் விருப்பமின்றி, என்னை வற்புறுத்தி, என் கணவர் உறவு கொள்கிறார்.இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டு இருந்தது.இது குறித்து போலீஸ் விசாரணை நடத்த, நீதிமன்றம் உத்தரவிட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், அந்த பெண் கூறியது உண்மை என தெரிய வந்தது.

இதையடுத்து, அந்த பெண்ணின் கணவன் மீது, பாலியல் பலாத்கார வழக்கை போலீசார் பதிவு செய்தனர்.இந்த சம்பவம் குறித்து, ஸ்வயம் என்ற பெண்கள் அமைப்பின் நிறுவனர், அனுராதா கபூர், செய்தியாளர்களிடம், கூறியதாவது:பொதுவாக இது போன்ற வழக்குகள், குடும்ப வன்முறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவது வழக்கம்.

'கணவனாகவே இருந்தாலும், மனைவியின் விருப்பமின்றி உறவு கொள்ள முயற்சித்தால், பலாத்காரத்தில் சேரும்' என, இந்திய தண்டனை சட்டத்தில், திருத்தம் மேற்கொள்ள, பெண்கள் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன.இந்நிலையில், இப்படியொரு வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பது, வரவேற்கத்தக்கது. ஒரு பெண்ணின் உடல், அவளுக்கு மட்டுமே சொந்தமானது. கணவனாகவே இருந்தாலும், அவள் அனுமதியின்றி தொடுவது குற்றம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X