பா.ஜ., - எம்.பி., விலகல் மேலிடம் மீது குற்றச்சாட்டு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 பா.ஜ., - எம்.பி., விலகல் மேலிடம் மீது குற்றச்சாட்டு

புதுடில்லி:பா.ஜ.,விலிருந்து விலகுவதாக, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த, சாவித்திரிபாய் புலே, என்ற, எம்.பி., அறிவித்துள்ளார்.

உ.பி.,யில்,உள்ள பாராய்ச் தொகுதி, பா.ஜ., - எம்.பி., யாக இருப்பவர், சாவித்திரிபாய் புலே. அம்பேத்கரின் நினைவு தினமான நேற்று, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:நான் தலித் என்பதால், கட்சிக்குள் என் கருத்துகள் உதாசீனப்படுத்தப்பட்டன. தலித்துகளுக்கு எதிராக, மிகப்பெரிய சதிதிட்டத்தை, பா.ஜ., தீட்டி வருகிறது.

அவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடுகளையும், இல்லாமல் செய்ய திட்டமிட்டு வருகிறது. சமூகத்தில், பிரிவினையை உண்டாக்க முயற்சிக்கிறது; எனவே, பா.ஜ.,வில் இருந்து விலகுகிறேன்.கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியைராஜினாமா செய்துவிட்டேன். பாராய்ச் தொகுதி, எம்.பி., பதவியில் மட்டும் தொடர்வேன்.அரசியலமைப்பை காக்கும் என் போராட்டம் தொடரும். ஜன., 23ல், லக்னோவில், மாபெரும் பொதுக் கூட்டம் நடத்த திட்டமிட்டு உள்ளேன்.

'அனுமன், தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்' என, முதல்வர் யோகி ஆதித்யநாத், சமீபத்தில் பேசினார். அப்படியானால், நாடு முழுவதும் உள்ள அனுமன் கோவில்களில், தலித்கள், அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
07-டிச-201810:09:05 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> போயேன் என்னாச்சு உனக்கு எவனாச்சும் அதிகம் துட்டு தந்துருப்பான் அதான் போயின்னே இருக்கே பை பை
Rate this:
Share this comment
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
07-டிச-201814:40:53 IST Report Abuse
RamRahimRobertஅப்படி தான் உங்க கட்சிக்கு நிறைய பேரு வந்தார்களா....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201802:21:17 IST Report Abuse
தமிழ்வேல் இதுமாதிரி தான் அந்த கட்சி ஆளுங்க அவருகிட்ட நடந்துக்கிட்டாங்க போல....
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
07-டிச-201807:31:41 IST Report Abuse
ஆரூர் ரங் தலித் கடவுள் ஆலயத்தில் தலித்தைவிட ஒரு பிராமணர் பூஜாரியாக இருப்பது தான் சிறப்பு. அதுதான் பணிவின் அடையாளம் அதேபோல பிராமண கடவுளர் (??) ஆலயத்தில் தலித் அர்ச்சகராகலாம் . தேடிப்பார்ப்போம்
Rate this:
Share this comment
RamRahimRobert - Bhakthas Nagaram,இந்தியா
07-டிச-201814:43:55 IST Report Abuse
RamRahimRobertஅனுமாரை தலித் என்று சொன்னதே ஒரு கேவலம். கடவுள் சாதி கொண்டு வந்து விடீர்கள். அதற்கு உங்களின் கருத்து அதை விட படு கேவலம்....
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
07-டிச-201805:01:30 IST Report Abuse
Rajavel பிஜேபி உயர் ஜாதி RSS சார்பு பிராமணர்களின் கட்சி. பிஜேபியில் இருக்கும் மற்ற ஜாதியினர் அனைவரும் அவர்கள் சொல்லும் வேலைகளை செய்வதற்கு மட்டுமே. இதை மற்றவர்கள் உணரும்போது, வெளியேறும்போது பிஜேபி தனிமரமாக இருக்கும்.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201802:22:35 IST Report Abuse
தமிழ்வேல் இப்போ மட்டும் ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X