சீக்கியர் வேடத்தில் பயங்கரவாதி உலா

Added : டிச 07, 2018
Advertisement
 சீக்கியர் வேடத்தில் பயங்கரவாதி உலா

புதுடில்லி:போலீசாரால் தேடப்படும், பயங்கரவாதி ஜாகிர் மூசா, பஞ்சாப் மாநிலத்தில், சீக்கியர் போல் வேடமணிந்து, சுற்றித் திரிவதாக, போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசில், சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பில், மூன்று பேர் கொல்லப் பட்டனர். இதற்கு பொறுப்பேற்ற, ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் ஏழு பேர், டில்லிக்குள் நுழைய திட்டமிட்டது தெரிய வந்தது.

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் ஒருவனான, ஜாகிர் மூசா, மாறுவேடத்தில் சுற்றித் திரிவதாக, பஞ்சாப் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, உ.பி., டில்லி, ஹரியானா ஆகிய மாநிலங்களில் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அம்மாநிலங்களின் போலீசாருக்கு, பஞ்சாப் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X