மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல்| Dinamalar

மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல்

Added : டிச 07, 2018
 மணல் திருட்டில் ஈடுபட்ட மாட்டு வண்டிகள் பறிமுதல்

வில்லியனுார்:வருவாய் துறை அதிகாரிகளை கண்டதும், ஆற்றில் விட்டுச்சென்ற மாட்டு வண்டிகள் நீண்ட நேரத்திற்கு பிறகு பறிமுதல் செய்யப்பட்டது.வில்லியனுார் சங்கராபரணி ஆற்றில் ஒதியம்பட்டு, கணுவாப்பேட்டை, ஆரியப்பாளையம், சேந்தநத்தம், கோனேரிக்குப்பம், பிள்ளையார்குப்பம், செல்லிப்பட்டு உள்ளிட்ட பகுதி யில் மணல் கொள்ளை ஜோராக நடந்து வருகிறது. நேற்று பிற்பகல் கோனேரிக்குப்பம் சங்கராபரணி ஆற்றின் நடுவே மாட்டு வண்டிகள் மணல் திருட்டில் ஈடுபடுவதாக 1031 என்ற எண்ணுக்கு புகார் வந்தது.புகாரை தொடர்ந்து துணை தாசில்தார் நித்தி யானந்தம் உள்ளிட்ட வருவாய் துறையினர் சம்பவ பகுதிக்கு சென்றனர். அதிகாரிகளை பார்த்ததும் ஆற்றின் நடுவே தண்ணீரில் மாட்டுவண்டிகளை விட்டுவிட்டு, மணல் கொள்ளையர்கள் தப்பிச்சென்றனர்.இதையடுத்து தண்ணீரின் நடுவே இருந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து, வண்டி உரிமையாளர்கள் குறித்து விசாரித்தனர். விசாரணையில், கோனேரிக்குப்பம் மற்றும் கூடப்பாக்கம் பகுதியை சேர்ந்த பாரத், பிரகாஷ், கோபி, சின்னத்தம்பி ஆகியோர் வண்டிகள் என தெரியவந்தது. துணை தாசில்தார் நித்யானந்தம் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X