சி.பி.ஐ., வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Added : டிச 07, 2018
Advertisement

புதுடில்லி:கட்டாய விடுமுறையில் அனுப்பும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, சி.பி.ஐ., இயக்குனர், அலோக் வர்மா தாக்கல் செய்த மனு மீதான ன் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ.,யில், அதன் இயக்குனர், அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனர் ராஜேஷ் அஸ்தானா இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதையடுத்து, இருவரது பொறுப்பையும் பறித்து, கட்டாய விடுமுறையில் அனுப்ப, மத்திய அரசு உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, அலோக் வர்மா, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, சி.வி.சி., எனப்படும், மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் சார்பில், சொலிசிட்டர் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டதாவது:அவசர சூழ்நிலையில், இது போன்ற அவசர முடிவை எடுக்க வேண்டிய நிலையில், இந்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

சட்ட விதிகளின்படி, சி.பி.ஐ.,யை கண்காணிக்கும் பொறுப்பு, சி.வி.சி.,க்கு கொடுக்கப்பட்டு உள்ளது.இரண்டு மூத்த அதிகாரிகள் இடையே அதிகார போட்டி ஏற்பட்ட சூழ்நிலையில், அமைப்பு தடையில்லாமல் செயல்படும் வகையில், இந்த முடிவு எடுக்கப்பட்டது.இவ்வாறு அவர் வாதிட்டார்.அப்போது, அமர்வு கூறியதாவது:

இந்த பிரச்னை, திடீரென உருவாகவில்லை. ஜூலையிலேயே துவங்கிவிட்டது. மத்திய அரசின் எந்த நடவடிக்கையும், நியாயமாகவும், பாரபட்சம் இல்லாமல், அந்த அமைப்பின் செயல்பாட்டுக்கு சிக்கல் ஏற்படாத வகையிலும் இருக்க வேண்டும்.சி.பி.ஐ., இயக்குனரை நியமிக்கும் அதிகாரம் உள்ள, தேர்வுக் குழுவுடன், பொறுப்பை பறிக்கும் முடிவு குறித்து ஏன் விவாதிக்கவில்லை?இவ்வாறு அமர்வு கூறியது.

இதைத் தொடர்ந்து, மற்ற தரப்பினரும் தங்களது வாதத்தை முன்வைத்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல், உச்ச நீதிமன்ற அமர்வு, தீர்ப்பை ஒத்தி வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X