ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு இன்று தேர்தல்

Added : டிச 07, 2018
Advertisement
ராஜஸ்தான், தெலுங்கானா மாநிலங்களுக்கு இன்று தேர்தல்


புதுடில்லி: ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநில சட்டசபைக்கு, இன்று தேர்தல் நடக்க உள்ளது.
.ராஜஸ்தானில், முதல்வர் வசுந்தரா தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம், 200 சட்டசபை தொகுதிகளில், 4.77 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.ஆல்வார் மாவட்டத்தில் உள்ள ராம்கர் சட்டசபை தொகுதியில், பகுஜன் சமாஜ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், திடீரென மரணமடைந்தார். அங்கு தேர்தல், தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, 199 தொகுதிகளில், நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. இதில், 2,247 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், 189 பேர் பெண்கள். தேர்தலில் பிரதமர் மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும், காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்த கட்சி தலைவர் ராகுல், ஆகியோரும், பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கனா
தெலுங்கானாவில், மொத்தம், 119 சட்டசபை தொகுதிகளில், 2.80 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 1,821 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, 119 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங் , 99 இடங்களிலும், அதன் கூட்டணி கட்சிகளான தெலுங்கு தேசம், 13 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் மூன்று இடங்களிலும் போட்டியிடுகின்றன. பா.ஜ., 118 இடங்களில் போட்டியிடுகிறது. இரு மாநிலங்களுக்கும் , இன்று காலை, 8:00 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்குகிறது. ஐந்து மாநிலங்களுக்கான ஓட்டு எண்ணிக்கை, டிச., 11ல் நடக்கிறது; அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகி விடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X