பொது செய்தி

இந்தியா

1 ரூபாய் நாணயத்தை தயாரிக்க ரூ.1.11 செலவு

Added : டிச 07, 2018
Advertisement

புதுடில்லி:ஒரு ரூபாய் நாணயத்தை தயாரிக்க, 1.11 ரூபாய் செலவழிக்கப்படுவதாக, ஆர்.பி.ஐ., எனப்படும், ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.

நாட்டில், இரண்டு ஆண்டுகளாக, 1 ரூபாய் நாணயங்கள் பயன்படுத்துவது குறைந்து வருகிறது. 'புழக்கத்தில் உள்ள, 1 - 2 - 5 - 10 ரூபாய் நாணயங்களை தயாரிக்க, எவ்வளவு ரூபாய் செலவழிக்கப்படுகிறது?' என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கியிடம், சமீபத்தில் கேட்கப்பட்டது. இதற்கு நேற்று, ரிசர்வ் வங்கி பதில் அளித்துள்ளது.

அதன் விபரம்:ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை தயாரிப்பதற்கு, சராசரியாக, 1.11 ரூபாய் செலவழிக்கப்படுகிறது. அதாவது, 1 ரூபாய் நாணயத்தின் மதிப்புக்கு மேல், 11 பைசா கூடுதலாக செலவாகிறது.மேலும், 2 ரூபாய் நாணயத்தை தயாரிக்க, 1.28 ரூபாய்; 5 ரூபாய் நாணயத்தை தயாரிக்க, 3.69 ரூபாய்; புதிய, 10 ரூபாய் நாணயத்தை தயாரிக்க, 5.54 ரூபாய் செலவழிக்கப்படுகிறது.

நான்கு ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது, நடப்பு ஆண்டில், ரூபாய் நாணயங்கள் தயாரிப்பு குறைந்து வருகிறது. 2016 - 17ம் நிதியாண்டில், அதிகபட்சமாக, 220.1 கோடி நாணயங்கள் தயாரிக்கப்பட்டன.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.மும்பை, ஐதராபாத் ஆகிய நகரங்களில், ரிசர்வ் வங்கிக்கு சொந்தமான இடங்களில், ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X