சகாயபுரம் தமிழ் கவுன்சிலர் ஏழுமலை மறைவு: பெங்களூரு தமிழர்கள் திரண்டு வந்து அஞ்சலி

Added : டிச 07, 2018
Advertisement

சகாயபுரம்:தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால், 'கோமா' நிலைக்கு தள்ளப்பட்ட தமிழ் கவுன்சிலர் ஏழுமலை, சிகிச்சை பயனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்தார்.

பெங்களூரு, சகாயபுரம் வார்டு சுயேச்சை கவுன்சிலர் ஏழுமலை, 40. இவருக்கு பிரேசர் டவுன் கோல்ஸ் சாலையுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மூக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, அளவுக்கு அதிகமாக மயக்க மருந்து செலுத்தப்பட்டதால், அவர் கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். பின், சிங்கப்பூரில் சிகிச்சை அளிக்கப்படுவதற்கு கொண்டு செல்லப்பட்டு, உடல் நிலை தேறாததால், மீண்டும் பெங்களூரு கொண்டு வரப்பட்டார்.இங்கு தனியார் மருத்துவமனையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் காணப்படாததால், சிகிச்சை பலனளிக்காமல், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு உயிரிழந்தார்.

ஏழுமலை மறைவை ஒட்டி, பெங்களூரு மாநகராட்சி அலுவலகங்களில், நேற்று ஒரு நாள் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்து, விடுமுறை அளிக்கப்பட்டது.இவரது மறைவால், சகாயபுரம் வார்டு மட்டுமின்றி, புலிகேசி நகர் தொகுதி முழுவதும் பலரும் சோகத்தில் காணப்பட்டனர்.தகவலறிந்த மேயர் கங்காம்பிகா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் காங்., அமைச்சர் ஆஞ்சனேயா, முன்னாள் காங்., எம்.எல்.சி., நாராயணசாமி, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் சிவராஜ் உட்பட, பல்வேறு பிரமுகர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பெங்களூரு மாநகராட்சி சமூக நீதி நிலைக்குழு தலைவராக இருந்த ஏழுமலை, பல்வேறு சமூக சேவையில் ஈடுபட்டு வந்தார். இதனால், மக்கள் மத்தியில் நல்ல பெயருடன் திகழ்ந்து வந்தார்.தன் வார்டு மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வந்ததால், இரண்டாவது முறையாகவும் கவுன்சிலரானார். தமிழரான இவர், பெங்களூரு அரசியல் பிரமுகர்களிடத்தில் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.

தமிழர்களுக்காக பல விஷயங்களில் ஆதரவாக இருந்து வந்தார்.இவரது மறைவு, தமிழர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. திரளாக வந்து, அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X