பொது செய்தி

இந்தியா

பிரதமரை வரவேற்க தயாராகும்'பேசும் மரங்கள்'

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (6)
Advertisement
பிரதமர் மோடி, பேசும் மரங்கள்

விஜயபுரா:இம்மாதம் இறுதியில் விஜயபுராவுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்க, பேசும் மரங்கள் தயாராகி வருகின்றன.

விஜயபுரா விவசாய ஆராய்ச்சி மைய வல்லுனர் பத்ரகொண்டா என்பவர், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி, விவசாயிகளுக்கு உதவ வேண்டுமென்ற நோக்கில், பேசும் மரங்களை உருவாக்கியுள்ளார்.செடி, மரம், கொடிகளுக்கும் உயிருள்ளது என்ற விஞ்ஞானிகளின் கருத்தை முன்வைத்து, சோதனை முறையில் இரண்டு மரங்களை, பேசும் மரங்களாக அவர் மாற்றியுள்ளார்.

இரண்டு மரங்களுக்கு ஆடியோ எம்ப்ளிபையர், வைப்ரேட்டர், ஒலி பெருக்கி பொருத்தப்பட்டுள்ளது. சோலார் பேனல் அடிப்படையில் செயல்படும். தானியங்கி வசதி கொண்டது.மரங்களின் வேர், பிராணி, பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இந்த தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
மரத்தின் கீழே மக்கள் நின்றால் போதும், தொழில்நுட்பம் தானாகவே செயல்பட்டு மரம் பேசத்துவங்கும். பெயரில் தனக்கு ஏற்படும் வலி, வேதனைகளை விவரிக்கும்.சுற்றுச்சூழல், இயற்கையை அலட்சியப்படுத்தினால், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கும். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும் என்பது உட்பட, பல விஷயங்களை பேசி முடித்த பின், இறுதியில் நன்றி கூறும்.

ஒரு மரம் பேச துவங்கியவுடன், வைப்ரேட்டர் மூலம் மற்றொரு மரத்தின் சில கிளைகள் அசைய துவங்கும். இதை பார்ப்பவர்களுக்கு, ஒரு மரம் பேசுவதை கேட்டு, மற்றொரு மரம் தலையாட்டி ஆமோதிப்பதாக தோன்றும்.இம்மாதம் 24 முதல், 31 வரை, விஜயபுராவில் இந்திய கலாசார உற்சவம் நடக்கவுள்ளது. உற்சவ துவக்க நாளன்றோ அல்லது நிகழ்ச்சி நடக்கும் ஏதாவது ஒரு நாளிலோ பிரதமர் மோடி பங்கேற்பது பெரும்பாலும் உறுதியாகியுள்ளது.

இவ்வேளையில் மேடையிலேயே, தங்கள் பேச்சின் மூலமாக, பிரதமரை வரவேற்கவும், தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும், இரண்டு மரங்கள் தயார் செய்யப்படுகின்றன.விவசாய வல்லுனர் கிரிஷ் பத்ரகொன்டா கூறுகையில், ''மரங்களுக்கும் உயிர் உள்ளது. அவை கண்ணீர் விடும் என்பதை மனதில் கொண்டு, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தி, பேசும் மரங்கள் உருவாக்கப் படுகின்றன.

''இந்த மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும். வைப்ரேட்டர் மீது கவர் பொருத்தியுள்ளதால், மழை பெய்தாலும் பாழாகாது. இந்த நடைமுறைக்காக 8,000 ரூபாய் செலவிடப்பட்டது,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201821:00:16 IST Report Abuse
நக்கல் இந்த கருவியை பப்பு அல்லது சுடாலின் மீது கட்டினால் என்னவாகும் என்று பார்க்கவேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201816:11:36 IST Report Abuse
Bhaskaran முதலில் செய்தியாளர்கள்கிட்டே பேசுறாரா அதைச்சொல்லுங்கய்யா
Rate this:
Share this comment
Cancel
partha - chennai,இந்தியா
07-டிச-201814:27:45 IST Report Abuse
partha வடையை எண்ணுங்க என்றால் துளையை என்னும் கேசுகளாக இருக்கீங்களேபா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X