அமித் ஷாவின் ரத யாத்திரைக்கு தடை: மேற்கு வங்க அரசின் முடிவுக்கு ஐகோர்ட் பச்சை கொடி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 அமித் ஷாவின் ரத யாத்திரைக்கு தடை: மேற்கு வங்க அரசின் முடிவுக்கு ஐகோர்ட் பச்சை கொடி

கோல்கட்டா:மேற்கு வங்கத்தில், பா.ஜ., தலைவர் அமித் ஷா தலைமையிலான, ரத யாத்திரைக்கு, மாநில அரசு மட்டுமின்றி, கோல்கட்டா உயர் நீதிமன்றமும் அனுமதி மறுத்துள்ளது.

நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக, பா.ஜ., தலைமை அறிவித்துள்ளது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.

'ஜனநாயகம் காப்போம்' என்ற பெயரில், இந்த மாநிலத்தில், ரத யாத்திரைகளை நடத்த, பா.ஜ., திட்டமிட்டுள்ளது.இந்த யாத்திரையை, பா.ஜ., தேசிய தலைவர், அமித் ஷா, இன்று துவக்கி வைப்பதாக திட்டமிடப்பட்டது. எனினும், பா.ஜ., யாத்திரைக்கு, போலீசார் அனுமதி மறுத்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து, பா.ஜ., சார்பில், கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணையின் போது, பா.ஜ.,வின் ரத யாத்திரையால், மத கலவரம் வெடிக்க வாய்ப்பிருப்பதாகவும், அதன் காரணமாகவேஅனுமதி மறுக்கப்பட்டதாகவும், மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, பா.ஜ., தரப்பு, மம்தா தலைமையிலான அரசு, பா.ஜ.,வின் யாத்திரைக்கு அனுமதி மறுப்பதன் மூலம், அரசியல் அமைப்பு சட்டத்தை மீறுவதாக புகார் தெரிவித்தது.அப்போது குறுக்கிட்ட, மாநில அரசின் மூத்த வழக்கறிஞர், யாத்திரைக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணங்களை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதாக அறிவித்தார்.இந்த வழக்கை விசாரித்த, உயர் நீதிமன்ற நீதிபதி, தபப்பிரதா, பா.ஜ.,வின் கோரிக்கையை நிராகரித்தார்.

இது குறித்து, நீதிபதி உத்தரவிட்டதாவது:தற்போதைய சூழலில், மாநிலத்தில், பா.ஜ., ரத யாத்திரை நடத்த அனுமதிக்க முடியாது.ரத யாத்திரைக்கு அனுமதி மறுத்த, மாநில அரசின் செயலுக்கு காரணம் என்ன என்பதை, இம்மாதம், 21க்குள், அந்தந்த மாவட்ட, எஸ்.பி.,க்கள், நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.


திட்டமிட்ட சதி



திட்டமிட்டே, எங்கள் யாத்திரைக்கு மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது; மாநில அரசின் இந்த செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது. பல நாட்களுக்கு முன்பே, அனுமதி கோரி விண்ணப்பித்த நிலையில், வேண்டுமென்றே, கோப்புகளை கிடப்பில் போட்டு, தற்போது, அவசர கதியில் அனுமதி மறுப்பது, அரசியல் உள்நோக்கம் உடையது. எனினும், நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்க விரும்பவில்லை.திலீப் கோஷ் மேற்கு வங்க மாநில, பா.ஜ., தலைவர்

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
08-டிச-201809:13:59 IST Report Abuse
Anandan சபாஷ்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
08-டிச-201802:34:32 IST Report Abuse
தமிழ்வேல் இன்றய சூழ்நிலையில் கை வெட்டு, கால் வெட்டு, நாக்கு வெட்டு, தலைவெட்டு, உடலைக் கூறுபோடுவது .... இதுவெல்லாம் தெரிந்தவர்களால் ரதயாத்திரை நடத்தினால் விபரீதங்கள் நடைபெற வாய்ப்புண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X