சித்துவுக்கு பேச்சு போச்சு ஓய்வெடுக்க பரிந்துரை

Updated : டிச 07, 2018 | Added : டிச 07, 2018 | கருத்துகள் (20)
Share
Advertisement
சண்டிகர்:தொடர் சர்ச்சைகளில் சிக்கிய, பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்துவின் குரல்வளை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும், அதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும், மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. பஞ்சாபில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, 55, சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சராக உள்ளார்.தெலுங்கானா
 சித்துவுக்கு பேச்சு போச்சு ஓய்வெடுக்க பரிந்துரை

சண்டிகர்:தொடர் சர்ச்சைகளில் சிக்கிய, பஞ்சாப் மாநில அமைச்சரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான, நவ்ஜோத் சிங் சித்துவின் குரல்வளை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வும், அதற்காக அவர் சிகிச்சை பெறுவதாகவும், மாநில அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பஞ்சாபில் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, 55, சுற்றுலா மற்றும் கலாசார துறை அமைச்சராக உள்ளார்.தெலுங்கானா மாநில தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாளான, நேற்று முன் தினம், காங்., கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த சித்து, பிரதமர், நரேந்திர மோடி மற்றும் உ.பி., முதல்வர், யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்தார்.

இதையடுத்து, உ.பி.,யைச் சேர்ந்த, ஹிந்து யுவ வாஹனி அமைப்பு, சித்துவின் தலைக்கு, 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது.இந்நிலையில், நேற்று, பஞ்சாப் மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்ப தாவது:ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தலுக்கு, 17 நாட்கள் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டதாலும், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் அடிக்கடி பயணித்ததாலும், சித்துவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

சித்துவின் குரல்வளை நரம்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, பேச முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஐந்து நாட்கள் ஓய்வில் இருக்க அறிவுறுத்தி உள்ளனர். ரகசிய இடத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சமீபத்தில், அண்டை நாடான, பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் சித்து பங்கேற்றதும், அது தொடர்பான அவரது பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
07-டிச-201820:57:09 IST Report Abuse
நக்கல் இவர் கழுத்தை நெரித்த யாரோ சரியாக செய்யவில்லை.. பப்புவாகத்தான் இருக்கும், அவர்தான் அரை குறையாக வேலை செய்வார்... சித்தூ தலைக்கு 1 கோடி அதிகம்.. முண்டாசு காசுக்கு மேல ஒண்ணும் தேறாது..
Rate this:
Cancel
Pasupathi Subbian - trichi,இந்தியா
07-டிச-201819:44:04 IST Report Abuse
Pasupathi Subbian அந்த நகைச்சுவை ஷோவை தலைமை ஏற்று நடத்தலாமா
Rate this:
Cancel
07-டிச-201819:19:15 IST Report Abuse
மு.செந்தமிழன் Mr.Sidhu why dont you come to Tamilnadu to for your affected vocal cord treatment. Because Tamil language and its food will recover soon.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X