கேரள வெள்ள பாதிப்புக்கு கூடுதல் நிதி வழங்க ஒப்புதல்

Added : டிச 07, 2018
Advertisement

புதுடில்லி:கேரளாவில், கனமழை, பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்க, தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, கூடுதலாக, 3,048 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டைச் சேர்ந்த, முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், ஆகஸ்டில் பெய்த கனமழை, பெரு வெள்ளத்தில், 14 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன. நுாற்றுக்கணக்கானோர் பலியாகினர்; பல கோடி ரூபாய் மதிப்பிலான தனி நபர் சொத்துகள், பொது சொத்துகள் நாசமாயின.

இதையடுத்து, மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள சேதம் குறித்து, மத்திய குழு பார்வையிட்டு, மத்திய அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.'மாநிலத்தில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, 4,700 கோடி ரூபாய் வழங்க வேண்டும்' என, மத்திய அரசிடம், மாநில அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, இடைக்கால நிவாரணமாக, 600 கோடி ரூபாயை, கேரளாவுக்கு, மத்திய அரசு ஒதுக்கியது.

இந்நிலையில், மழை, புயலால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு, நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில், டில்லியில் நேற்று சிறப்பு கூட்டம் நடந்தது.இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய அரசு உயர் அதிகாரிகள், தேசிய பேரிடர் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தின் முடிவில், கேரளாவுக்கு, ஏற்கனவே வழங்கப்பட்ட தொகை தவிர, கூடுதலாக, 3,048 கோடி ரூபாயை, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க, மத்திய அரசு உத்தரவிட்டது. புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு, 539 கோடி ரூபாயும், நாகாலாந்துக்கு, 131 கோடி ரூபாய் வழங்கவும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X