'கோவிலுக்கு பதில் பள்ளி கட்டுங்கள்' மத்திய அமைச்சர் ஆக்ரோஷ பேச்சு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 'கோவிலுக்கு பதில் பள்ளி கட்டுங்கள்' மத்திய அமைச்சர் ஆக்ரோஷ பேச்சு

பட்னா:''அரசியல் கட்சிகள், கோவில் கட்டுவதில் ஆர்வம் காட்டுவதை கைவிட்டு, பள்ளிகள் கட்டுவதற்கு முன்வர வேண்டும்,'' என, மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலவருமான, உபேந்திர குஷ்வாகா கூறினார்.

பீஹாரைச் சேர்ந்த, ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சித் தலைவர், உபேந்திர குஷ்வாகா, மத்திய மனிதவளத் துறை இணை அமைச்சராக உள்ளார்.கடந்த லோக்சபா தேர்தலில், பீஹாரில், நான்கு தொகுதிகளில் போட்டியிட்ட அவரது கட்சி, மூன்று தொகுதிகளில் வென்றது.அடுத்த ஆண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில், கூடுதல் தொகுதிகள் ஒதுக்கும்படி, வலியுறுத்தி வருகிறார்.

இதற்கு சரியான பதில் கிடைக்காததால், பா.ஜ., மற்றும் பீஹாரில் ஆட்சியில் உள்ள முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளத்தை, கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கிடையே, பீஹாரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது:

அரசியல் கட்சிகள், கோவில் கட்டுவதில் ஆர்வம் காட்டு கின்றன. அதை விடுத்து, பள்ளிகள் கட்டுவதற்கு குரல் கொடுக்க வேண்டும். போதிய அளவில் பள்ளிகள் இருந்தால், பீஹார், எப்போதோ முன்னேறியிருக்கும்.பீஹார் முதல்வர், நிதிஷ்குமார், என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறார். அதற்காக அவரை நான் மன்னித்து விடுகிறேன். ஆனால், மாநிலத்தில் கல்வித் துறை மேம்பாட்டுக்காக, நான் கூறிய பரிந்துரைகளை அவர் நிறைவேற்ற வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
07-டிச-201810:17:34 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> யாஆஆஆ கோயில்கட்டினா பூஜாரிக்கு துட்டு பள்ளிக்கூடம் காட்டினாள் ஆஹா எவ்ளோ பெரு பஞ்சம் பிழைக்கலாம் பாத்துண்ணே தான் இருக்கோமுங்கோ அரசுப்பள்ளிகளாய் மூடுவிழாபண்ணிட்டு மந்திரிபிரதானிகள் எல்லாம் தத்தம் பெட்டைலே ஸ்கூல் ஓபன் பண்ணி 8தலைமுறைக்கு சொத்து சேர்க்கலாமுன்னுதான் இந்தப்பிலான் என்ஜாய் , பட்டி தொட்டில் இருக்கும் பாமரனும் படிக்கோணும் என்று எல்லைக்கிராமங்களிலு பள்ளிகளை திறந்தார் எங்க முன்னாள் முதல்வர் பெரியவர் காமராசர் ஐயா ,திமுக அதிமுகளே என்று பேதமே இல்லாமல் கல்விசாலைகள் திறந்துகோடீஸ்வரனா இருக்கானுகளே தெரியுமா மக்களிக்கொள்ளை அடிச்சுதானுங்க இவ்ளோவசதிகளும் வந்தன மக்களும் கடனைவாங்கியாச்சு தம் பிள்ளைகளை இந்த காஸ்டல்யாண பல்லில் படிக்க வலிக்குதுங்க அதுதான் உண்மை
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
07-டிச-201806:34:58 IST Report Abuse
 Muruga Vel எல்லா மாநில அரசியல் தலைகளும் கல்லூரி கட்டி காசு பாக்கறாங்க …. அரசாங்கம் மது விக்கறதுல பிசி ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X