பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் ஊழியர் ஊதியம் 12ல் மீண்டும் பேச்சு

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

ரேஷன் ஊழியர்கள் ஊதிய உயர்வு தொடர்பாக, 12ம் தேதி, தொழிற்சங்க நிர்வாகிகளுடன், கூட்டுறவு துறை பேச்சு நடத்த உள்ளது.

கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், ரேஷன் கடைகளில் பணிபுரியும், 30 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு, மாதம் அதிகபட்சமாக, 12 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. அதேசமயம், நுகர்பொருள் வாணிப கழக ரேஷன் ஊழியர்களுக்கு, 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்கப்படுகிறது. இதனால், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கும்படி, கூட்டுறவு ஊழியர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து, அவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பாக பரிசீலிக்க, கூடுதல் பதிவாளர் ஒருவர் தலைமையில், கூட்டுறவு துறையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு, அக்டோபர், 16, 24, 25ம் தேதிகளில், ரேஷன் ஊழியர் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தியது; எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், 12ம் தேதி, மீண்டும் பேச்சு நடக்க உள்ளது. இம்மாத இறுதிக்குள், ஊதிய உயர்வை வழங்கவில்லை எனில், தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக, தொழிற்சங்கங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201815:30:08 IST Report Abuse
Bhaskaran முதலில் நுகர்வோருக்கு அனைத்துப்பொருட்களும் சரியான எடையில் சிப்பம் கட்டி கடைகளில் கொடுப்பதற்கு உத்தரவாதமில்லை இவர்கள் அதிலேயே மாதம் லட்ச ரூபாய்க்கு மேல் ஒருக்கடையில் கொள்ளையடிக்கின்றனரே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X