பொது செய்தி

தமிழ்நாடு

துணை வேந்தர் நியமனம் பல்கலை விதிகளில் மாற்றம்

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்வதற்கான தேடல் குழுவில், தகுதியானவர்களை நியமிக்கும் வகையில், பல்கலை விதிகள் திருத்தப்பட உள்ளன.

பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கு, தகுதி யானவர்களை, தேடல் குழு வழியாக, பல்கலைகளின் வேந்தரான கவர்னர் தேர்வு செய்கிறார். கடந்த காலங்களில், துணை வேந்தர்கள் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்தில், முறைகேடுகள் நடந்தன. தகுதியற்ற நபர்களை, தேர்வு செய்வதால், உயர் கல்வியின் தரம் குறைந்து வருகிறது.

இதுபோன்ற குற்றச்சாட்டால், மதுரை, காமராஜர் பல்கலை மற்றும் கோவை, பாரதியார் பல்கலை துணை வேந்தர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். அதேபோல், மதுரை, காமராஜர் பல்கலைக்கு, தேடல் குழுக்கள் நியமிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி, பலமுறை கலைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐந்து பல்கலைகளில், துணை வேந்தர் பணியிடங்கள் காலியாகின்றன. இந்த பதவிகளுக்கு, தற்போதே போட்டி ஏற்பட்டுஉள்ளது. யாரை பிடித்தால், பதவியை பெறலாம்; யாரை தேடல் குழுவில் நியமித்தால், தங்களுக்கு வேண்டியவர்களை, துணை வேந்தர் பட்டியலில் சேர்க்கலாம் என, பேரம் துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே, துணை வேந்தர்கள் நியமனத்தில், சட்ட சிக்கல்களை சந்தித்த உயர் கல்வி துறை, புதிய துணை வேந்தர்களை தேர்வு செய்வதிலாவது, நேர்மையாக செயல்படுமா என்ற, கேள்வி எழுந்துள்ளது.தேடல் குழுவில் தகுதியற்றவர்களையும், அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு வேண்டியவர்களையும் நியமிக்காமல், நேர்மையும் நிபுணத்துவமும் பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என, கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து, தேடல் குழுவுக்கான விதிகளை மாற்றுவது குறித்து, உயர் கல்வி துறையும், கவர்னர் அலுவலகமும், ஆலோசனை நடத்தி வருகின்றன. ஊழல் பிரச்னையில் சிக்காதவர் களை, தேடல் குழு உறுப்பினர்களாக நியமிக்கும் வகையில், புதிய விதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்புகள், பல்கலைகளின், சிண்டிகேட் அமைப்புக்கு தெரிவிக்கப்படும் என, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201817:48:23 IST Report Abuse
Bhaskaran எல்லா சட்டங்கள் திட்டங்களும் ஏட்டளவில் இருக்கும் ஏற்கனவே இருக்கும் விதிகளை விடவா பணம் அதிகாரம் இவையிரண்டும் எல்லாவயற்றதும் மூடிமறைத்துவிடும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X