பொது செய்தி

தமிழ்நாடு

பதிவாளர், தேர்வு அதிகாரி பதவி காலி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

நீண்ட காலமாக காலியாக உள்ள, பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள் நிரப்பப்படாத தால், அண்ணா பல்கலை நிர்வாக பணிகள் ஸ்தம்பித்துள்ளன.
தேசிய அளவில் புகழ்பெற்ற, சென்னை அண்ணா பல்கலையில், பேராசிரியர்கள் நியமனங்களில் விதிமீறல், விடைத்தாள்கள் திருத்துவதில் பணம் வாங்கி, மதிப்பெண் வழங்கியது என, அடுக்கடுக்கான புகார்கள் உள்ளன.

இவை குறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.பல்கலை துணைவேந்தராக நியமிக்கப்பட்ட, சுரப்பா, பல்கலையை திருத்துவதற்கு, முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலரின் ஒத்துழைப்பு இன்மையால், நிர்வாகத்தை துாய்மைப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பல்கலையின் முக்கிய பதவிகளான, பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்கள், பல மாதங்களாக காலியாக உள்ளன. இந்த இடங்களுக்கு, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும். பணியிடங்களை நிரப்புவதில், உயர்கல்வி துறைக்கும், அண்ணா பல்கலைக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.பல்கலையின் பதிவாளராக, குமார் என்ற பேராசிரியரும்; தேர்வு அதிகாரியாக, வெங்கடேசன் என்ற பேராசிரியரும், கூடுதல் பொறுப்பில் உள்ளனர்.

இவர்கள் பொறுப்பு பதவியில் உள்ளதால், சுயமாக முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உயர்கல்வி துறை வழியாக, இந்த அதிகாரிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதால், நிர்வாக ரீதியான முடிவுகளை எடுப்பதில், பல்கலை திணறுகிறது.பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு விதிகள் வகுத்தல், முறைகேடுகள் நடக்காத வகையில், தேர்வு நடைமுறையை மாற்றுதல், காலியிடங்களை நிரப்புதல் போன்ற பணிகள் கிடப்பில் உள்ளன.

மத்திய அரசின் நிதி உதவியில், ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதும் சிக்கலாகியுள்ளது. கூடுதல் பொறுப்பில் பணியாற்றும் அதிகாரிகள், ஒதுக்கப்பட்ட நேரத்தில் வகுப்பு எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மாணவர்கள்,பேராசிரியர்கள் நலன் கருதி, பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவியை நிரப்ப வேண்டும் என, பல்கலை சார்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201817:51:16 IST Report Abuse
Bhaskaran எல்லா தகுதிகளும் நிறைந்த? மிகச்சரியான நபர் இன்னும் கிடைக்கவில்லையோ ஸ்டாலினிடம் பொன்முடியிடம் கேட்டால் கொண்டு குவித்து விடுவார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X