அரசியல் செய்தி

தமிழ்நாடு

சபாநாயகர் தனபால் மறுப்பு: ஸ்டாலின் கடும் எதிர்ப்பு

Added : டிச 07, 2018
Advertisement

சென்னை:''கஜா புயல் பாதிப்பு குறித்து பேச, சட்டசபை விவாதத்தை, ஒரு நாள் நீட்டிக்க வேண்டும் என, நாங்கள் முன்வைத்த கோரிக்கையை, சபாநாயகர் ஏற்க மறுத்து விட்டார்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தெரிவித்தார்.

அவர் அளித்த பேட்டி:தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்னை என்ற அடிப்படையில், தமிழக அரசின் தீர்மானத்துக்கு ஆதரவு அளித்துள்ளோம். நியாயமாக, இந்த தீர்மானம், மத்திய அரசை கண்டித்து அமைந்திருக்க வேண்டும். ஆனால், வெறும் வேண்டுகோள் வைக்கிற வகையில், தீர்மானம் அமைந்திருக்கிறது. அதில், ஆணையத்தை கண்டித்திருக்கின்றனர்; மத்திய அரசை கண்டிக்கவில்லை.

'கஜா' புயல், பாதிப்பு பற்றி விவாதிக்க, கூடுதலாக, ஒரு நாள் சட்டசபையை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால், எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. இதை, தி.மு.க., வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு, அவர் கூறினார்.காங்கிரஸ் சட்டசபை தலைவர், கே.ஆர். ராமசாமி, ''விவசாயிகளுக்கு ஆதரவான தீர்மானம் என்பதால், ஆதரவு அளித்தோம். இந்த விவகாரத்தில், கர்நாடக தேர்தலை மனதில் வைத்து, மத்திய அரசு செயல்படுவது, கண்டிக்கத்தக்கது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X