பொது செய்தி

தமிழ்நாடு

சத்துணவு மையம் துவக்கம்

Added : டிச 07, 2018
Advertisement
 சத்துணவு மையம் துவக்கம்

கள்ளக்குறிச்சி:தரம் உயர்த்தப்பட்ட தென்கீரனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு மையம் துவக்க விழா நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கடந்த ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியின் புதிய சத்துணவு மையத்தை கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கி, திறந்து வைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு வழங்கினார்.நிகழ்ச்சிக்கு பி.டி.ஓ., நாராயணசாமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் முகமதுகவுஸ் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் நாராயணன், துணை தலைவர் ஜெகதீசன், பொருளாளர் கஸ்துாரி நாகேஷ், துணை செயலர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மகேந்திரன், சாந்தநாயகி, ராணி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் ரவி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X