அரசியல் செய்தி

தமிழ்நாடு

அணை ஒன்றா; இரண்டா?தி.மு.க., சந்தேகம்

Added : டிச 07, 2018
Advertisement

சென்னை:''கர்நாடக அரசு கட்டப்போவது, ஒரு அணையா அல்லது இரண்டு அணையா... என்ற, சந்தேகம் எழுகிறது,'' என, சட்டசபையில், துரைமுருகன் சந்தேகத்தை கிளப்பினார்.
சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - துரைமுருகன்:கர்நாடக அரசு, 66 டி.எம்.சி., கொள்ளளவு உடைய அணையை, 6,000 கோடி ரூபாயில் கட்டப்போவதாக அறிவித்துள்ளது. இந்த அணை, அம்மாநிலத்தில் உள்ள, கே.ஆர்.எஸ்., அணையை விட, பெரியது; சேலம், மேட்டூர் அணையை விட சிறியது.

இவ்வளவு நிதியை செலவிட்டு, ஒரு அணை தான் கட்டப் போகின்றனரா அல்லது இரண்டு அணை கட்டப் போகின்றனரா... என்ற, சந்தேகம் உள்ளது. மேகதாது மட்டுமல்ல, வேறு எந்த இடத்திலும், அவர்கள் அணையை கட்டக் கூடாது.எனவே, கே.ஆர்.எஸ்., அணைக்கு கீழ், மேட்டூர் அணைக்கு மேல் பகுதியில், கர்நாடக அரசு, எந்த அணையும் கட்டக் கூடாது என்று, தீர்மானம் போட்டு இருந்தால், வலுவாக இருந்திருக்கும்.

துணை முதல்வர் பன்னீர்செல்வம்: கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, 'காவிரியின் குறுக்கே, இரண்டு அணைகள் கட்டப்படும்' என்று கூறியிருந்தார். அதை எதிர்த்து, தமிழக அரசு தொடர்ந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.தற்போது, மத்திய நீர்வள ஆணையம், மேகதாது அணை கட்டுவதற்கு, அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தின் அனுமதி பெறாமல், கர்நாடக அரசு, காவிரியில் எத்தனை அணைகள் கட்டினாலும், அது சட்டத்திற்கு புறம்பானது. இதற்கு, மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதற்கு, கடும் எதிர்ப்பை தெரிவிக்கவே, சட்டசபை கூட்டப்பட்டுள்ளது.இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X