அரசியல் செய்தி

தமிழ்நாடு

'வரிகொடா இயக்கம் இந்திய இறையாண்மைக்கு எதிரானது'

Added : டிச 07, 2018 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை:''மேகதாது விவகாரத்தில், மத்திய அரசுக்கு எதிராக, வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும் என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியிருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது,'' என, மீன் வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் பேசினார்.சென்னையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், படகுகளை நிறுத்த, ஐந்து கோடி ரூபாய் செலவில், வார்ப்பு கட்டப்பட உள்ளது. இதற்காக, நேற்று நடந்த அடிக்கல் நாட்டு விழாவில், அமைச்சர் ஜெயகுமார் பேசியதாவது:

'மேகதாது விவகாரத்தில், மத்திய அரசை எதிர்த்து, வரிகொடா இயக்கம் நடத்த வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியிருப்பது, இந்திய இறையாண்மைக்கு எதிரானது. 'மேகதாது வில் அணை கட்டப்பட்டால், அதற்கு முழு காரணம், முதல்வர் பழனிசாமி தான்' என, அரசியல் கண்ணோட்டத்துடன், புழுதிவாரி துாற்றுகிறார், ஸ்டாலின்.

அவரின் பேச்சை, மக்கள் நம்பமாட்டார்கள்.மாநில சுய உரிமையை காக்க, அனைத்து நடவடிக்கைகளையும், அ.தி.மு.க., அரசு எடுத்து வருகிறது. இதனால் தான், மத்திய அரசை எதிர்த்து, இரண்டு முறை வழக்கு தொடர்ந்து உள்ளோம். ஆனால், தி.மு.க., ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசை எதிர்த்து எத்தனை வழக்குகள் தொடர்ந்தனர்.கூட்டணி என்றால், கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும். வைகோ, திருமாவளவன் உள்ளிட்டோர், ஒரே கூட்டணியில் தொடர்ந்தால், கொள்கை இல்லாத கூட்டணி, தேர்தல் நேரத்தில் சிதறும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
07-டிச-201805:55:57 IST Report Abuse
Bhaskaran மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கம் தொடங்கிய போது கவிக்குயில் சரோஜினி அவரை எச்சரித்தார் நாளை சுதந்திர இந்தியாவில் நம்மக்களே நமது அரசுக்கு எதிராக ஒத்துழைக்க மாட்டார்கள் இதுஒரு தவறான முன்னுதாரணமாகி விடும் என்றார்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X