மரக்காணம் அருகே விஷால் படப்பிடிப்பு திடீர் ரத்து

Added : டிச 07, 2018
Advertisement

மரக்காணம்:மரக்காணம் அடுத்த கூனிமேட்டில், மசூதி அருகே நடக்க இருந்த நடிகர் விஷால் படப்பிடிப்பு திடீரென ரத்து செய்யப்பட்டது.விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே இ.சி.ஆரில் உள்ள கூனிமேடு கிராமத்தில், நேற்று காலை 8.30 மணிக்கு நடிகர் விஷால் நடிக்கும் 'அயோக்கியன்' படப்பிடிப்பு நடைபெறுவதாக இருந்தது. இதற்காக, சென்னையில் இருந்து படக்குழுவினர் வந்திருந்தனர்.அங்குள்ள மசூதி அருகே விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்வது போல் படக்காட்சி எடுக்க ஏற்பாடு செய்திருந்தனர். இதற்கிடையே, நேற்று பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால், அப்பகுதி முஸ்லிம்கள் சிலர், படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.இதையடுத்து, இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, 'உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்துவது குற்றம். பாபர் மசூதி இடிப்பு நாள் என்பதால், மசூதி அருகில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது. படப்பிடிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்' என, படப்பிடிப்பு குழுவினரை எச்சரித்தனர்.இதனால், ஷூட்டிங் பணி நிறுத்தப்பட்டது. இதுபற்றி, சென்னையில் இருந்து வந்து கொண்டிருந்த நடிகர் விஷாலுக்கு தகவல் தெரிவித்தனர். அவர், பாதி வழியிலேயே திரும்பிச் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X