தொழிலாளி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி

Added : டிச 07, 2018
Advertisement

கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார்

விழுப்புரம்:கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக புகார் கூறி, கணவன், மனைவி மற்றும் குழந்தைகள், விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தற்கொலைக்கு முயன்றனர்.விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார் அருகே துரிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் அண்ணாதுரை,32; இவரது மனைவி புனிதா, 29; மகன் வசீகரன்,8; மகள்கள் ரமாதேவி,5; பிரியதர்ஷிணி,3.இவர்கள் அனைவரும், நேற்று பகல் 12.30 மணியளவில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்திற்கு வந்தனர். திடீரென தாங்கள், கேனில் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீக்குளிக்க முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி, தடுத்து நிறுத்தி, விசாரித்தனர். விசாரணையில் அண்ணாதுரை கூறியதாவது, நான் சென்னையில் உள்ள டீக்கடையில் வேலை செய்கிறேன். என் தந்தை சுப்பிரமணி, நான்கு ஆண்டுகளுக்கு முன், திருப்பாலப்பந்தலை சேர்ந்த பழனி என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதில் ஒரு லட்சம் ரூபாய் திருப்பி கொடுத்த நிலையில், கடந்தாண்டு செப்., 13ம் தேதி, தந்தை இறந்துவிட்டார்.இந்நிலையில், கந்து வட்டி கணக்கில், மேலும், 2.50 லட்சம் ரூபாய். கேட்டு, பழனி எங்களை கட்டாயப்படுத்துகிறார். இதுபற்றி, போலீசாரிடம் புகார் கூற முடியாதபடி பழனி மிரட்டியதோடு, எங்கள் வீட்டை பூட்டிவிட்டு, என்னையும், குடும்பத்தையும் வெளியே விரட்டி விட்டார். அவர் மீது காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, நாங்கள் வாழ வழி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். போலீசார், அண்ணாதுரையை சமாதானம் செய்து, தாலுகா போலீஸ் நிலையம் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X