பொது செய்தி

இந்தியா

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

Added : டிச 07, 2018
Advertisement

பண்ருட்டி:திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அமாவாசையை முன்னிட்டு மூலவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அமாவாசையையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை, மூலவர் பெருமாள் ராஜஸ்தான் உடையில் பண்டரிபுரம் பாண்டுரங்கன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.காலை 9:00 மணிக்கு உற்சவர் உள் புறப்பாடு நடந்து திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. விழாவில், ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.நாளை 8ம் தேதி திருமொழி திருநாள் (பகல் பத்து) உற்சவம் காலை 9:00 மணிக்கு உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், மாலை 3:00 மணக்கு பிரபந்த சேவை, 4:30 மணிக்கு பிரபந்த சாற்றுமுறை, 5:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X