பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று நோய் பரவுகிறதா? சுகாதார துறை செயலர் பேட்டி

Added : டிச 07, 2018
Advertisement

நாகப்பட்டினம்:''கஜா புயல் பாதித்த மாவட்டங்களில், தொற்றுநோய் பரவுவதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளை, பொதுமக்கள் நம்ப வேண்டாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகையில், நேற்று அவர் அளித்த பேட்டி:'கஜா' புயல் பாதிப்பு ஏற்படுத்திய மாவட்டங்களில், தொற்று நோய் பரவாமல் தடுக்க, 486 நிலையான மருத்துவக் குழுக்கள் அனுப்பப்பட்டு, 29 ஆயிரத்து, 168 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இவற்றில், 8.37 லட்சம் பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுஉள்ளது.தேவையான நபர்களை, மேல் சிகிச்சைக்கு பரிந்துரைத்து, உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொசு புழுக்களை அழிக்க, 312 குழுக்கள், குடிநீர் தொட்டிகளுக்கு குளோரின் கலக்க, 372 குழுக்கள் அமைக்கப் பட்டு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர். மேலும், டாக்டர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், 3,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்று நோய் பரவுவதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவுகிறது. வதந்திகளை நம்ப வேண்டாம்.

பொதுமக்களுக்கு தொற்று நோய், தோல் நோய் பரவாமல் தடுக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X