மாணவனுடன் தலைமறைவான கல்லுாரி ஆசிரியை போலீசில் சரண்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மாணவனுடன் தலைமறைவான கல்லுாரி ஆசிரியை போலீசில் சரண்

Added : டிச 07, 2018

நாகர்கோவில்:திருமணமான, இரண்டு வாரங்களில், மாணவனுடன் தலைமறைவான கல்லுாரி ஆசிரியை, நேற்று போலீசில் சரணடைந்தார்.கன்னியாகுமரி அருகேயுள்ள தனியார் கல்லுாரியின் ஆசிரியை, 24 ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும், இரு வாரங்களுக்கு முன் திருமணம் நடந்தது.தான் வேறொரு நபரை காதலிப்பதாகவும், பெற்றோர் வற்புறுத்தி திருமணம் முடித்ததாகவும், முதலிரவில், மணமகனிடம் ஆசிரியை கூறினார். அதிர்ச்சியடைந்த மணமகன், பெண்ணின் பெற்றோரிடம் அவரை ஒப்படைத்து சென்றார்.இரண்டு வாரங்கள் கழித்து, ஆசிரியை மாயமானார். போலீஸ் விசாரணையில், ஆசிரியை பணிபுரியும் கல்லுாரியில் படிக்கும், 20 வயது மாணவர் ஒருவருடன் காதல் இருந்ததும், அவருடன் தலைமறைவானதும் உறுதியானது.அவர்களை தேடி வந்த நிலையில், இருவரும் நேற்று, கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். ஆசிரியையின் பெற்றோர் மற்றும் அவரது கணவரை வரவழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர்.அப்போது, 'எங்களால் காதலை மறக்க முடியவில்லை; பிரித்து விடாதீர்கள்' என, இருவரும், போலீசாரிடம் கெஞ்சினர். 'சட்டப்படி அதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறி, ஆசிரியையை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X