பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி.,யில் டிச., 18ல் சொர்க்கவாசல் திறப்பு

Added : டிச 07, 2018
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், டிச., 18ல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறதுவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நாளை, பகல்பத்து உற்சவம் துவங்குகிறது, வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச., 18 காலை, 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று அதிகாலை, பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, ஆழ்வார்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், டிச., 18ல் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறதுவைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நாளை, பகல்பத்து உற்சவம் துவங்குகிறது,

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, டிச., 18 காலை, 6:20 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது. அன்று அதிகாலை, பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்கமன்னார் சொர்க்கவாசல் வழியாக எழுந்தருள, ஆழ்வார்கள் எதிர்கொண்டு சேவித்து, மாட வீதிகள் வழியாக, ராப்பத்து மண்டபம் வந்தடைகின்றனர். அங்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம், பத்தி உலாவுதல், திருவாராதனம், அரையர் வியாக்யானம், சேவாகாலம் நடக்கிறது.

டிச., 18 துவங்கி, 28ம் தேதி வரை, தினமும் வடபத்ரசயனர் சன்னதியில், ராப்பத்து உற்சவங்கள் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரியபெருமாள் ராப்பத்து மண்டபத்தில் எழுந்தருள்வர். அங்கு அரையர் சேவை, சேவா காலம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X