சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டப்பஞ்சாயத்து மோசடி

Added : டிச 07, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 கட்டப்பஞ்சாயத்து மோசடி

மதுரை:சென்னையில், மூன்று கோடி ரூபாய் கடன் வாங்கி, தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினரிடம், பணம் பெற்றுத்தருவதாக கூறி, பிரபல நிறுவனத்தின் வினியோகஸ்தரிடம், ஐந்து லட்சம் ரூபாய் மற்றும் காரை பறித்த ரவுடி வரிச்சியூர் செல்வம், 51, கைது செய்யப்பட்டான்.
சென்னை ஆலப்பாக்கம், மெர்ஸின் தாம்சன், 46, என்பவர், ஹிந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் சென்னை வினியோகஸ்தர். இவரது, 20 ஆண்டு கால நண்பர் முத்துகிருஷ்ணன். இவருக்கு, மெர்ஸின் தாம்சன், மூன்று கோடி ரூபாய் கடன் கொடுத்தார்.இந்நிலையில், முத்துகிருஷ்ணன் தற்கொலை செய் ததால், குடும்பத்தினரிடம் கடனை திரும்ப கேட்டுஉள்ளார்.

ஐந்து பிரிவுகள்அவர்கள் தர மறுத்ததால், முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிமுகமான, பிரபல ரவுடி, வரிச்சியூர் செல்வத்தை, தாம்சன் அணுகினார்.'பணத்தை பெற்றுத்தர, 10 லட்சம் ரூபாய் தரவேண் டும்' என, செல்வம் கேட்க, ஐந்து லட்சம் ரூபாயும், மீதி பணத்துக்கு ஈடாக, தன் சகோதரரின், 'வால்வோ' காரையும் தாம்சன் கொடுத்தார். ஆனால், பணத்தை பெற்றுத்தராமல், எட்டு மாதங்களாக செல்வம் ஏமாற்றினான்.

மதுரை அண்ணாநகர் பேக்கரி ஒன்றில், செல்வத்தை சந்தித்து, பணம், கார் மற்றும் ஆவணங்களை கேட்டபோது, தாம்சன் தாக்கப்பட்டார். இது குறித்து, அண்ணாநகர் போலீசில் அவர் புகார் செய்தார்.நம்பிக்கை மோசடி, காயப்படுத்துதல், கொலை மிரட்டல் உட்பட, ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, நேற்று வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

இவன் மீது, இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்து, மோசடி வழக்குகள் பல நிலுவையில் உள்ளன. என்கவுன்டர்சில ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல்லில் நடந்த, போலீஸ் என்கவுன்டரில் ஒருவர் இறந்தார். அங்கிருந்த செல்வம், போலீசாரிடம் சரண் அடைந்து உயிரை காத்துக் கொண்டான். விரகனுார் ரிங் ரோட்டில், அ.தி.மு.க., நிர்வாகி கடத்தல் சம்பவங்களில், இவனது பெயர் அடிபட்டது. இவனை, குண்டர் சட்டத்திலும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
09-டிச-201808:59:56 IST Report Abuse
Narayanan Sklaxmi குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டவன், கட்ட பஞ்சயாத்து வழக்கு உள்ள ஒருநபர் எப்படி வெளியில் திரிகிறான், எல்லாம் இந்த மாமூல் மற்றும் கூறுகெட்ட நீதித்துறையும் தான், பலவழக்குகள் உள்ள ஒருவனுக்கு எப்படி ஜாமின் வழங்குகிறார்கள் . தவிர இந்த நபரை நம்பிக்கை துரோகம் கொலை மிரட்டல் போன்ற பிரிவின் கீழ் கைதாம், எவனை ஏவிவிட்ட நபர் மீதுஎன்ன நடவடிக்கை என்று தெரியவில்லை ஏன்னென்றால் அவன் பணக்காரன் கொடுப்பதைகொடுத்து கவனித்திருப்பான்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
08-டிச-201819:27:37 IST Report Abuse
வெகுளி போராளீஸ்ல ஒருத்தன் போல தெரியுது..... தமிழ் உணர்வாளன், சமூக ஆர்வலன்னு எதையாவது சொல்லி தப்பிச்சுருவான்....
Rate this:
Share this comment
Cancel
Sudarsanr - Muscat,ஓமன்
08-டிச-201814:48:05 IST Report Abuse
Sudarsanr தி மு க மட்டுமல்ல அ தி மு க வும் காரணமே..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X